News November 14, 2024

பாஜகவுடன் கூட்டணி இல்லை: இபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் நிச்சயமாக கூட்டணி இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணியா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன். அப்படியிருந்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது பாஜக அல்லாத கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

News November 14, 2024

சட்டம் அறிவோம்: Injunction Order என்றால் என்ன?

image

Injunction Order என்ற சட்டத்தை ஸ்டே ஆர்டர், தடை உத்தரவு என பல பெயரில் அழைக்கும் வழக்கம் உள்ளது. தடை உத்தரவு என்றால் ஒரு குறிப்பிட்ட நபர் (அ) ஒரு தரப்பினர் இன்னதை செய்ய வேண்டும் (அ) செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில்/ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். தடை உத்தரவுகளை Interim, Mandatory, Perpetual, Prohibitory என 4 வகையாகப் பிரிக்கலாம்.

News November 14, 2024

உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்த கனிமொழி?

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் Dy CM உதயநிதி, அரசு & கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், நேற்று முதல் தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பங்கேற்ற எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் அத்தொகுதியின் MP கனிமொழி பங்கேற்கவில்லை. அம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், MLAக்கள், துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்ற நிலையில், கனிமொழி பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 14, 2024

திமுகவிற்கு நன்கொடை வாரி வழங்கியவருக்கு செக்.. அடுத்து?

image

புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய், ஆளும் திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை தயார் செய்து வருகிறார். இது 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இப்படியொரு நேரத்தில், தேர்தல் பத்திரம் மூலம் திமுகவிற்கு ₹509 கோடி (90%) நன்கொடையாக வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு நடத்தி வருகிறது. இது திமுகவிற்கு மறைமுக நெருக்கடியா என்ற கேள்வி எழுகிறது.

News November 14, 2024

கரடியை கண்டு பயப்படாதீர்கள்!

image

பங்குச்சந்தை சரியும்போது பலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கும். இது சகஜம் என்றாலும், எந்தவொரு முதலீடு நம்மை நிம்மதியாக தூங்கவிடுகிறதோ, அதுவே நல்ல முதலீடு என்கிறார்கள் வல்லுநர்கள். எனவே, எமோஷன்களை ஓரம்கட்டிவிட்டு, நீண்டகால அளவில் சிறுக சிறுக முதலீடு செய்வதே சிறந்தது. குறிப்பாக, சந்தை இறக்கம் என்பது சிறந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

News November 14, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு<<14605172>> GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) லண்டன் (Regent Park) 2) Indo-Tibetan Border Police 3) Barometer 4) ஷிவாங்கி சிங் 5) புளூட்டோனியம் 6) சால்கோபாப்ஸ் இண்டிகா 7) 1968. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களைப் பெற Way2Newsஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 14, 2024

கஸ்தூரி பேச்சு இழிவானது: HC

image

சமூக ஆர்வலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் கஸ்தூரியின் வாயிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை என்று HC மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ, சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. கஸ்தூரியின் பேச்சு தெலுங்கு பேசும் மக்களை மோசமாக சித்தரித்துள்ளது. தனது பேச்சுகளை நியாயப்படுத்தவே அவர் முயற்சித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

News November 14, 2024

இன்று 19 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

News November 14, 2024

Beauty Tips: தலையில் ஈறு, பேன் தொல்லையா?

image

கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈறு, பேன் பிரச்னைக்கு கிராம்பு பேக் தீர்வளிக்கும் என சருமநல மருத்துவர்கள் கூறுகின்றனர். பூண்டு சாறு (5ml) & கிராம்பு பொடியை (10g) வேப்ப எண்ணெய்யில் (25ml) கலந்து முடியின் வேர்வரை படும்படி நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் வெந்நீரில் அலச வேண்டும். இதை வாரத்திற்கு இருமுறை என ஒரு மாதம் செய்தால் பேன்கள் முற்றிலுமாக நீங்கிவிடும் என பரிந்துரைக்கின்றனர்.

News November 14, 2024

Hype’க்கு worth-ஆ சூர்யாவின் கங்குவா? Review

image

1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின குழந்தை ஒன்றின் தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நாயகன் போராடுவதே ”கங்குவா”. சூர்யா தனது நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். கேமரா வொர்க்கும் சிறப்பாக உள்ளது. ஆனால், படத்தில் வலுவான எமோஷனல் காட்சிகளும், கனெக்ஷனும் இல்லை. DSP’யின் இசை நன்றாக இருந்தாலும், BGM ஆங்காங்கே பிசிறு தட்டுகிறது. முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது. Rating 2.25/5

error: Content is protected !!