News November 17, 2024

Personality Test : உங்களுக்கு முதலில் எது தெரிந்தது?

image

முதலில் மனித முகம் தெரிந்தால் – நீங்கள் இயல்பாகவே நம்பிக்கை அதிகமாகக் கொண்டவர். உங்களின் எண்ண ஓட்டத்தின் படி வாழ நினைப்பவர். சவால்களை எதிர்கொள்ள விரும்புவீர்கள் * முதலில் நடனமாடும் பெண் தெரிந்தால் – நீங்கள் எதிலும் தனித்து நிற்க விரும்புவீர்கள். உங்கள் லட்சியங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். எப்போதும் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க விரும்புவீர்கள். நீங்க முதலில் எதனை கவனித்தீர்கள்…

News November 17, 2024

அஜித்-சிவா இணையும் படத்தின் டைட்டில் இதுவா?

image

சிவா-அஜித் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இந்த செய்தி வெளியானதில் இருந்தே படத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஏனென்றால் சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து படங்களின் டைட்டிலும் V என்ற எழுத்தில் தொடங்கும் இந்நிலையில் இப்படத்திற்கு ‘வெறித்தனம்’ என டைட்டில் வைக்க இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

News November 17, 2024

Apply Now: SIDBI வங்கியில் வேலை வேண்டுமா?

image

SIDBI வங்கியில் காலியாக உள்ள கிரேடு A & B பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager, Assistant Manager பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Any UG & PG Degree. சம்பளம்: ₹44,500 – ₹99,700. வயதுவரம்பு: 21-33. தேர்வு முறை: எழுத்துத்தேர்வு & நேர்காணல். விண்ணப்பக் கட்டணம்: ₹1,100. மேலும் விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News November 17, 2024

கஸ்தூரியை கைது செய்தது எப்படி?

image

ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி சிக்கியது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டுக்குள் பதுங்கியிருந்த அவர், தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து, போலீசார் தனது இருப்பிடம் வந்ததை அறிந்த அவர், கதவை பூட்டிக்கொண்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்துள்ளார். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவோம் என போலீசார் எச்சரித்த பின்பே, அவர் கைதாகியுள்ளார்.

News November 17, 2024

SUNDAY SPECIAL: ஈரோடு சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி?

image

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், வர மிளகாய் (12), நறுக்கிய சின்ன வெங்காயம் (100g), இஞ்சி பூண்டு விழுது (25g) சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். பின் கோழிக்கறி துண்டுகளை (500g) போடவும். மஞ்சள், தனியா, உப்பு & சிறிதளவு நீர் சேர்த்து 30 நிமிடங்கள் நன்கு வேகவிடவும். நீர் வற்றியதும் கருவேப்பிலை & தேங்காயைத் தூவி கிளறி, ஒரு நிமிடம் கழித்து இறக்கினால், சுவையான ஈரோடு சிக்கன் ஃப்ரை ரெடி.

News November 17, 2024

வெங்காயம், பூண்டு விலை சற்று குறைவு

image

கடந்த சில நாள்களாக போட்டி போட்டு உயர்ந்து வந்த பூண்டு, வெங்காயம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ₹120க்கு விற்பனையான வெங்காயத்தின் விலை இன்று ₹85க்கும், கிலோ ₹500க்கு விற்கப்பட்ட பூண்டு, ₹450க்கும் விற்பனையாகிறது. விளைச்சல் பாதிப்பால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்ட நிலையில், விலை குறைந்தது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

News November 17, 2024

விராட் இல்லை, இவர் தான் RCB அணியின் அடுத்த கேப்டனா?

image

அடுத்த RCB கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், தற்போது RCB அணி Auction’இல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை குறிவைப்பதாகத் தகவல் உள்ளது. மேலும், அவருக்கு Captain பதவி கொடுக்கும் முனைப்பிலும் அந்த அணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2016’இல் IPL சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை கேப்டனாக வென்றவர் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இ சாலா கப் நம்தே நடக்குமா?

News November 17, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை எங்குள்ளது? 2) TDS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலக வரலாற்றில் பழமையானதாக கருதப்படும் மரம் எது? 4) ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது? 5) கிளியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘பரதகண்ட புராதனம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) உலோகங்களின் அரசன் என அழைக்கப்படுவது எது? 8) ரஷ்ய நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 17, 2024

இன்று இறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு..

image

கார்த்திகை மாதம், சபரிமலை சீசன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் இறைச்சி விற்பனை மந்தமாகக் காணப்படுகிறது. இதனால் சிக்கன், மீன்களின் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சிக்கன் கிலோ ₹180-200 வரையும், மட்டன் கிலோ ₹800-850 வரையும் விற்கப்படுகிறது. சென்னையில் கிலோ ₹1000 வரை விற்பனை செயப்படும் வஞ்சரம் மீன் இன்று கிலோ ₹850க்கும், சங்கரா – ₹400க்கும் விற்பனையாகிறது.

News November 17, 2024

தனுஷ்- நயன் மோதல்: வெளியான புது தகவல்!

image

‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகள், பாடலை நயனின் ஆவணப்படத்தில் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு அனுமதி கேட்டதால், தனுஷ் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போனில் எடுத்த பட காட்சிகளை நயன் தரப்பு பயன்படுத்தியதால், தனுஷ் மேலும் கோபமடைந்துள்ளார். அத்துடன், பிரபலங்கள் பலரிடம் இருந்து அழுத்தம் தரப்பட்டதால் வெறுப்படைந்த தனுஷ், சட்டரீதியாக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!