India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதானி குழுமத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல. ஆனால், எப்போதெல்லாம் அதானி குழுமம் முதலீடு திரட்ட திட்டமிடுகிறதோ, அப்போதெல்லாம், அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகின்றன. 2023-இல் அதானி FPO வெளியிடும் நேரத்தில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வெளியானது. தற்போது நியூயார்க் ஷேர் மார்க்கெட்டில் 5700 கோடி திரட்ட பாண்ட் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் லஞ்சப் புகார் எழுந்துள்ளது.
அதானி நிறுவனம் இந்திய மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பல திட்டங்களை அதானி நிறுவனம் செயல்படுத்தி வருவதால் திமுக, அதிமுக கட்சிகள் சர்ச்சை வளையத்திற்குள் சிக்கியுள்ளன. 2014, 2024 என இரு கட்சிகளின் ஆட்சியிலும் அதானி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.
மருத்துவத்துறை அபரிமிதமாக வளர்ந்து வரும் சூழலில், மனிதர்களின் வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்டெம் செல் ஆராய்ச்சி வெற்றி பெறும்பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கள் 150 வயது வரை வாழ்வார்கள் என டாக்டர் எர்ன்ஸ்ட் வான் ஸ்வார்ஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கர்ப்பிணிகள் வீட்டில் பிரசவம் பார்த்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பேறு காலத்தில் தாய், சேய் இறப்பை தடுக்கும் நோக்கில், கர்ப்பமான 3 மாதம் முதல் சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி, இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து 25 முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தொடங்கவுள்ள BGT தொடருக்கு முன்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசும் போது, BGT கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும். இந்தியா ஒரு சிறந்த அணி என்றாலும் நாங்களும் நன்கு தயாராக இருக்கிறோம் என்றார். இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று உள்ளதைக் குறித்து பேசியவர், இன்னும் நிறைய வேகப்பந்துவீச்சாளர் தலைமை ஏற்கணும் என்றார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் (DMER) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அன்னை மருத்துவக் கல்லூரி, எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 இடங்களில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம்(NMC) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்ச குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. முறைகேடு புகார் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், BSE, NSE-க்கு அதானி கிரீன் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அமெரிக்காவில் இருந்து திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.
விஜய்யின் மகன் ஜோசப் சஞ்சய் இயக்கும் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை படக்குழு அணுகியதாகத் தெரிகிறது. ஆனால், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமன் இசையமைப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் திரை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி சரமாரியாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், அதானி ₹ 2,000 கோடி லஞ்ச வழக்குடன் இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி வருகிறார். லஞ்ச புகார் கொடுத்ததுமே, பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களையும், அமைச்சர்களையும் கைது செய்கிறீர்களே.. அதானியை கைது செய்ய உங்களுக்கு (மத்திய அரசு) என்ன தயக்கம்? உடனடியாக அதானி கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.