News November 22, 2024

பாகிஸ்தானுக்குள் நுழையும் சீன ராணுவம்: காரணம்?

image

பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சீன மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், CPEC (China Pakistan Economic Corridor) திட்டத்தில் பணியாற்றி வரும் 30 ஆயிரம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 3 தனியார் நிறுவனங்களை சீனா பணியமர்த்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு தங்கள் ராணுவத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News November 22, 2024

35 செமீ கொட்டிய பெருமழை

image

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 35 செமீ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இது, சராசரியை விட மிக அதிகமாகும். மேக வெடிப்பு காரணமாக இத்தகைய பெருமழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

’கிங் மேக்கர்’ எலான் மஸ்க்

image

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கை ’கிங் மேக்கர்’ என டைம் இதழ் பாராட்டியுள்ளது. அவர், ட்விட்டர் இணையதளத்தை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியபோது, பலரும் விமர்சித்தனர். ஆனால், இன்று அந்த தளம்தான் டொனால்ட் ட்ரம்ப்பை மீண்டும் அதிபராக்க உதவியிருக்கிறது. ஆகவே, ட்ரம்ப் வெற்றி பெற மஸ்க்கும் முக்கிய காரணம் என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

News November 22, 2024

வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்

image

சபரிமலை வர முடியாதவர்களுக்கு ஏதுவாக, பல ஆண்டுகளாக பக்தர்களின் வீடுகளுக்கு பிரசாதம் அனுப்பும் திட்டத்தை தபால் துறையும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் செயல்படுத்துகின்றன. இதனை இந்தியாவில் எந்த போஸ்ட் ஆபீஸில் இருந்து முன்பதிவு செய்தாலும், குறிப்பிட்ட நாளில் வீடுதேடி வரும். அதில், அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், குங்குமம், மஞ்சள் இருக்கும். ஒரு டின் அரவணை அடங்கிய தொகுப்பு ₹520 ஆகும்.

News November 22, 2024

BGT Test: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

image

பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ள BGT முதல் போட்டியின் டாஸை வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இந்திய அணி – ராகுல், ஜெய்ஸ்வால், படிக்கல், கோலி, பண்ட், ஜூரல், நிதிஷ் ரெட்டி, சுந்தர், ஹர்ஷித், சிராஜ், பும்ரா. ஆஸி. அணி – மேக்ஸ்வீனி, கவாஜா, லபுஸ்சக்னே, ஸ்மித், ஹெட், மார்ஷ், கேர்ரி, கம்மின்ஸ், ஸ்டார்க், லயன், ஹேசல்வுட்

News November 22, 2024

பொருளியல் தீவிரவாதியாக அதானி கருதப்படுவாரா?

image

பொருளாதார குற்றங்களை செய்து அதன்மூலம் USAஇல் பாதிப்புகளை ஏற்படுத்திய பலரை அந்நாடு கைது செய்துள்ளது. பங்குச்சந்தை முறைகேடு, முதலீடுகளை ஏமாற்றுவது உள்ளிட்ட குற்றங்களை பொருளியல் தீவிரவாதமாக அந்நாடு வரையறுத்துள்ளது. Operation Fallen Angel நடவடிக்கைகளில் ஈடுபட்ட CIA அமைப்புடன் இணைந்து சர்வதேச ஆப்ரேஷன்களை FBI கூட்டாக செய்துள்ளது. தற்போது அதானி வழக்கை FBI விசாரிப்பது கவனிக்கத்தக்கது.

News November 22, 2024

விஜய் வருகையால் திருமா புறக்கணிப்பு?

image

சென்னையில் டிச.6 நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவும், விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் அவர் கூட்டணி வைக்க உள்ளதாகவும், DMK கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், புத்தக விழாவில் திருமா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அவர் பங்கேற்க மறுப்பதாகத் தெரிகிறது.

News November 22, 2024

அதானியை அமெரிக்கா கைது செய்யுமா?

image

சூரிய சக்தி மின் ஒப்பந்தத்தைப் பெற முறைகேட்டில் ஈடுபட்ட கவுதம் அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ரகசிய நடவடிக்கைகள், நாடுகடத்தல் ஒப்பந்தம் மூலம் மட்டுமின்றி Extraordinary Rendition முறையிலும் அவரை அமெரிக்காவில் கைது செய்ய முடியும் என்கிறார்கள். அந்நிய நாட்டின் அனுமதி இல்லாமல் அந்நாட்டில் உள்ள குற்றவாளி மீது CIA ஆக்ஷன் எடுத்த கடந்த வரலாறுகள் இருக்கின்றன.

News November 22, 2024

’அண்ணாமலை’ பெயரைக் கேட்டவுடன் சூடான BJP கூட்டம்

image

சென்னையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார் அரவிந்த் மேனன். அதற்கு கரு.நாகராஜன், “தலைவர் அண்ணாமலை வந்தபின் கூட்டணி குறித்து பேசுவதுதான் சரி” என்று கூறியிருக்கிறார். உடனே இடைமறித்த H.ராஜா, “இப்போது யாரும் கூட்டணி பற்றி பேசவில்லை. அமைதியாக இருங்கள்” என்று காட்டமாக பதிலளித்தவுடன் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்தப் பேச்சு கைவிடப்பட்டது.

News November 22, 2024

அஸ்வின், ஜடேஜாவிற்கு பதிலாக அறிமுகமாகும் இளம் வீரர்கள்

image

இன்று தொடங்கவுள்ள ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது. இவர்களுக்கு பதிலாக நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தரை அணி நிர்வாகம் பெரிதளவில் நம்புவதாகக் கூறப்படுகிறது. அதே போல, இளம் வீரர்களான ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாக இருக்கிறார்கள் எனப்படுகிறது.

error: Content is protected !!