News November 22, 2024

தங்கம் விலை ₹640 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹640 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. நேற்று ₹57,160க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ₹7,145க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ₹80 உயர்ந்து ₹7,225க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ₹101க்கு விற்கப்படுகிறது.

News November 22, 2024

அமெரிக்காவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

image

உக்ரைன் – ரஷ்யா போரில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணை உதவிகளை வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த, தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்குவதாக புடின் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் இரு நாடுகளுக்கு இடையேயான போரை உலகப் போராக மாற்றும் முயற்சி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 22, 2024

வெள்ளை அறிக்கை கேட்கும் பிரேமலதா

image

மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் குறித்து நீதியரசர்கள் ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

News November 22, 2024

ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு

image

2025ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 25ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் தொடர் நிறைவடையவுள்ளது. முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 15 முதல் மே 31 வரை நடைபெறும் என்றும், 2027 ஐபிஎல் தொடர் மார்ச் 14 முதல் மே 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

தென் தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை

image

வரும் 26ஆம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் தாக்கத்தினால், 25 மற்றும் 27ஆம் தேதிகளில் கனமழையும், 26ஆம் தேதி அதி கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு

image

பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

News November 22, 2024

இந்த டிஷ்யூவின் விலை ₹8.4 கோடி.. ஏன் தெரியுமா?

image

ஒரு பொருளின் மதிப்பு அது எங்கு, எதற்கு பயன்படுகிறது என்பதன் அடிப்படையில் அமைகிறது. அப்படி தான், ஒரு சின்ன டிஷ்யூ பேப்பர் இந்திய மதிப்பீட்டில் ₹8.45 கோடிக்கு ஏலம் போயுள்ளது. காரணம், அது கால்பந்து வீரர் மெஸ்ஸி பயன்படுத்தியதாம். உலகக் கோப்பை 2022க்குப் பிறகு, மெஸ்ஸி தனது கண்ணீரைத் துடைக்க இதனை பயன்படுத்தியுள்ளார். இந்த டிஷ்யூவை டி-ஷர்ட், ஷூ போல ஏலத்தில் விட, அது வசூலை வாரியுள்ளது.

News November 22, 2024

இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்துவோம்: புடின் எச்சரிக்கை

image

Ballistic ஏவுகணையை பயன்படுத்தியதற்காக புதினை இங்கிலாந்து அரசு கண்டித்த நிலையில், அந்த ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்கப் போவதாக ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார். அதேநேரம், போர் நிறுத்தம் குறித்து டிரம்புடன் விவாதிக்க தயார் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, உக்ரைன் முதன்முறையாக அமெரிக்க, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News November 22, 2024

மூன்றாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா

image

BGT கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஓவரிலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில், ராகுல், ஜெய்ஸ்வால் ஓபனர்களாக களம் இறங்கினர். இதில், மூன்றாவது ஓவரில் ஸ்டார்க் பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஆஸி அணியின் வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறி வருகின்றனர்.

News November 22, 2024

தமிழகத்தில் இன்று சர்வதேச கூடைப்பந்து போட்டி

image

தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச கூடைப்பந்து போட்டி இன்று முதல் நவ.25 வரை நடக்கிறது. FIBA ஆசியக் கோப்பை தொடருக்கான இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னையில் நடக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இப்போட்டியில் இந்தியா – கத்தார் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள தலைசிறந்த 24 நாடுகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

error: Content is protected !!