News April 20, 2025

நாயகன் சூரிக்கு குவியும் பாராட்டு.. நெகிழ்ச்சியில் பதிவு

image

காமெடியனாக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் ‘மாமன்’ படம் மே 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே அவரது அடுத்த படமான மண்டாடியின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூரி நன்றி தெரிவித்து X-ல் பதிவிட்டுள்ளார். அதில் விருப்பத்தை வெற்றிக்குச் சேர்க்கும் பாலம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு என சூரி குறிப்பிட்டுள்ளார்.

News April 20, 2025

மாதம் ரூ.5,000 திட்டம்: இன்னும் 2 நாளே அவகாசம்

image

மத்திய அரசின் பிஎம் இன்டர்ன்சிப் திட்டத்தின்கீழ், படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை மட்டும் ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க 22-ம் தேதி கடைசி நாளாகும். அதாவது இன்னும் 2 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காதோர் உடனே விண்ணப்பிங்க. SHARE IT.

News April 20, 2025

எவ்வளவு நாள்தான் கெட்டவனாகவே நடிக்கிறது?

image

ஒரு நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டதாக SJ சூர்யா தெரிவித்துள்ளார். ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திக் கொண்டு இருக்க முடியாது எனவும், அதற்காக தான் நடிக்க வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும், தன்னுடைய இயக்கத்தை பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

அதிமுக – பாஜக கூட்டணி.. நயினார் முடிவில் திடீர் மாற்றம்!

image

தொகுதி பங்கீடு தொடர்பாக நயினாரின் பேச்சு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த 12-ம் தேதி தாமரை 40 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றார். இது அதிமுக நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேச வேண்டாம் எனவும் இரட்டை இலையோடு சேர்ந்து அதிகமாக சட்டப்பேரவைக்கு செல்வோம் என்றும் கூறியுள்ளார். ஏன் இந்த திடீர் மாற்றம்?

News April 20, 2025

எங்கே செல்லும் இந்த பாதை?..

image

ஓட்டுக்கு காசு வாங்குறது, டிராஃபிக் மீறுனா, ஹெல்மெட் போடலனா போலீஸ கவனிக்குறதுன்னு லஞ்சம் புரையோடி போயிருக்கு. இந்த தவறான பழக்கம் அடுத்த தலைமுறையையும் விட்டு வைக்கல. லஞ்சம் கொடுத்தா எந்த வேலையும் முடிஞ்சிடும்னு அழுத்தமா அவங்க மனசுல பதிஞ்சு போயிருக்கு. அதுக்கு உதாரணமா தான் கர்நாடகாவுல பரீட்சையில் பாஸ்ஸாக டீச்சருக்கே லஞ்சம் கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கு. இது எங்க போயி முடியுமோ?

News April 20, 2025

அவர்கள் இணைந்தால் பாஜகவிற்கு என்ன? பட்னவிஸ்

image

<<16151222>>உத்தவ் தாக்கரேவும்<<>>, ராஜ் தாக்கரேவும் இணைவதில் மகிழ்ச்சி என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் ஏன் பாஜக தலையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி திணிப்பை எதிர்த்து சகோதரர்களான 2 தாக்கரேக்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு வருத்தம் எனக் கூறப்படுகிறது.

News April 20, 2025

இண்டிகோ விமானம் மீது மோதிய டெம்போ..

image

பெங்களூரு விமான நிலையத்தில் பார்க்கிங்கில் இருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெம்போ மட்டும் பலத்த சேதமடைந்தது. டெம்போ டிரைவர் தூங்கியபடி வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 20, 2025

கொசுவில் இது வேற ரகம்..

image

நீங்க பார்க்குறது கொசுவே தான். ஆனா, இது வேற ரகம். இலங்கையின் மிரிகாமா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனம். சாதாரண கொசு இல்ல, இதுக்கு பேரு க்யூலெக்ஸ் சின்ஸ்டெல்லஸாம். பார்க்க சின்னதா இருந்தாலும் ரொம்ப ஆபத்தாம். பெரும்பாலான வைரஸ்களை கடத்தும் அபாயம் கொண்டதா கண்டறியப்பட்டிருக்கு. இலங்கை பூச்சியியல் வல்லுநரான கயான் குமாரசிங்கே தான் இப்படி பீதிய கிளப்பியிருக்காரு! உங்க கருத்து என்ன?

News April 20, 2025

RR-க்கு சோலி முடிஞ்சு.. இனி வாய்ப்பில்லை ராஜாதானா?

image

RR அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது. PLAY OFF-க்கு செல்ல 16 புள்ளிகள் தேவை என்பதால், மீதமுள்ள 6 போட்டிகளிலும் அந்த அணி கட்டாயம் வெல்ல வேண்டும். 14 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் தகுதிபெற வேண்டும் என்றாலும், 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், மற்ற அணிகளின் செயல்பாடுகளை பொறுத்தது என்பதால், 2-வது முறைக்கு வாய்ப்பு குறைவுதான்.

News April 20, 2025

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்: வெற்றி மாறன்

image

சூரி நடித்துள்ள ‘<<16155888>>மண்டாடி<<>>’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய வெற்றி மாறன், சூரியால் எந்தவித கேரக்டரிலும் நடிக்க முடியும் எனவும், அதற்கு அவரது உடல்வாகு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சூரி உடல் மற்றும் மனதளவில் வலிமையானவர் எனவும், எவ்வளவு அடித்தாலும் தாங்குவார் எனவும் கூறினார். கடலில் நடக்கும் படகு போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

error: Content is protected !!