News November 23, 2024

திசை மாறும் போர்: புதின்

image

உக்ரைனுடனான போர் திசை மாறுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், இந்தப் போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருகிறது என்றார். மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால் தீர்க்கமாக பதிலளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் 3ஆவது ஆண்டை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

சாம்பியன்ஸ் டிராபி; 26ஆம் தேதி கூடுகிறது ஐசிசி!

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பான குழப்பம் நிலவி வருவதால் வரும் 26ஆம் தேதி ICC அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் BCCI மற்றும் PCB அதிகாரிகள் பங்கேற்பார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை hybrid modeஇல் நடந்த வேண்டும் என BCCI கூறிய வருகிறது. ஆனால் அதை ஏற்க PCB மறுப்பதால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சமரசம் செய்ய ஐசிசி முயற்சித்து வருகிறது.

News November 23, 2024

பும்ராவை அடிச்சுக்க முடியுமா..!

image

அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் அதி சிறந்த பவுலராக பும்ரா விளங்குவதாக PAK முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார். பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அறிந்து, முதல் பந்தில் இருந்தே அட்டாக்கை தொடங்குவதில் பும்ரா வல்லவர் எனவும், ஆஸி., வீரர்களின் பலவீனத்தை பும்ரா சிறப்பாக கணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தன்மையால் தான் அவர் ஒரு அணியின் தலைவராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News November 23, 2024

ராசி பலன்கள் (23-11-2024)

image

12 ராசிக்காரர்களுக்கும் நாளைக்கான (நவ.23) ராசி பலன்களை தற்போது தெரிந்து கொள்வோம்.
➤மேஷம் – வெற்றி ➤ ரிஷபம் – நலம்
➤மிதுனம் – நன்மை ➤கடகம் – பணிவு
➤சிம்மம் – மறதி ➤கன்னி – நிம்மதி
➤துலாம் – வரவு ➤விருச்சிகம் – பெருமை
➤தனுசு – சோதனை ➤மகரம்- புகழ்
➤கும்பம் – நற்செயல் ➤மீனம் – கவனம்.

News November 23, 2024

அதானிக்கு எதிரான ஆக்‌ஷன் தொடக்கம்..!

image

SEBI உத்தரவின் பேரில் தேசிய பங்குச் சந்தை அதானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி குழுமம் அனைத்து விதமான தகவல்களையும் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. சந்தை விதிமுறைகளை அதானி குழுமம் முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்கான அதன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆய்வை தொடங்கியுள்ளதாக SEBI கூறியுள்ளது.

News November 23, 2024

இத்தாலி பிரதமருக்கு மோடி வழங்கிய பரிசு!

image

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். குறிப்பாக ஜி20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு வெள்ளி மெழுகுவர்த்தியை வழங்கினார். இந்தியாவின் கலாசாரத்தை உலக அரங்கில் பறைசாற்றும் விதமாக ​​ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, உ.பி., லடாக், ஒடிஷா மாநிலங்களில் இருந்து கைவினைப் பொருட்களை PM எடுத்துச் சென்றார்.

News November 23, 2024

சுப்ரியா சுலேவின் எதிர்காலம் நாளை தெரியும்..! (2/2)

image

ஏற்கனவே அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து துரோகம் செய்த நிலையில், சுப்ரியாவை தான் அவர் மலை போல் நம்பியுள்ளார். அதன் காரணமாகவே காங்., உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ள சரத் பவார், சுப்ரியாவை CM-ஆக்க திரைமறைவு வேலைகளை செய்தார். நாளை வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில், சுப்ரியாவின் எதிர்காலம் அமையும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய Way2News உடன் இணைந்திருங்கள்.

News November 23, 2024

சுப்ரியா சுலேவின் எதிர்காலம் நாளை தெரியும்..! (1/2)

image

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலம் நாளை தெரிய வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், NCP தலைவருமான சரத்பவாரின் மகள் தான் சுப்ரியா சுலே. இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சரத் பவார் அறிவித்த நிலையில், அவரது அரசியல் வாரிசாக சுப்ரியாவை முன்னிறுத்துகிறார்.

News November 23, 2024

மணிப்பூரை சுத்து போடும் 10,000 வீரர்கள்

image

மணிப்பூருக்கு கூடுதலாக 10,000 துணை ராணுவப்படை வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெறியாட்டமும், போராட்டமும் வெடித்துள்ளது. ஏற்கனவே அங்கு 1.98 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 258 பேர் வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.

News November 22, 2024

ஆரோக்கியத்துடன் ஆண்மைக்கான டிப்ஸ்

image

*ஜாதிக்காய் 100 கி., பூனைக்காலி விதை 200 கி., எடுத்துக்கொள்ளவும்.
*இளம் சூட்டில் ஜாதிக்காயை நெய்யில் வறுத்தபின் அரைத்து பொடியாக்கவும்.
*பூனைக்காலி விதையின் மேல்தோலை நீக்கிவிட்டு அரைத்து பொடியாக்கவும்.
*2 பொடிகளையும் ஒன்றாக கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
*நாள்தோறும் தூங்கும்முன் பசும்பாலில் ஒரு ஸ்பூன் இந்த பவுடரை கலந்து குடித்துவர ஆரோக்கியத்துடன் ஆண்மையும் மேம்படும்.

error: Content is protected !!