India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தென் தமிழகத்தில் கனமழைக்கும், 25 – 28ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் ஏலம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. 10 அணிகளுக்கும் சேர்த்து 204 வீரர்கள் தேவைப்படும் நிலையில் மொத்தமாக இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில், இந்திய வீரர்கள் 366, வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஏலம், இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. அதிகபட்ச விலையான ₹2 கோடிக்கு 81 வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மகா. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கரின் கருத்து கவனம் பெற்றுள்ளது. 200 இடங்களில் தனித்து போட்டியிட்டுள்ள அக்கட்சி, வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கக் கூடிய கூட்டணியைத் தேர்ந்தெடுப்போம் என அறிவித்துள்ளார். பாஜகவுடன் அம்பேத்கரின் பேரன் கூட்டணி அமைப்பாரா? என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. Stay tuned with Way2News for election updates
ஸ்கூல் பசங்களில் தொடங்கி வேலைக்கு செல்வோரும், எப்போது விடுமுறை கிடைக்கும், என்றே தான் காத்து இருப்பார்கள். அதுவும் வருடத்தின் கடைசி சில மாதங்கள் என்றாலே, நாம் தேடுவது அதில் எத்தனை பண்டிகைகள் வருகிறது, எத்தனை விடுமுறை நாள் கிடைக்கும் என்றே. அப்படி தேடுபவர்களுக்கு இதுவொரு அதிர்ச்சி செய்தியாகக் கூட இருக்கலாம். 2025 ஆண்டின் நவம்பரில் ஒரு பொது விடுமுறை கூட நமக்கு இல்லை. இதென்னடா கொடுமையா போச்சு..
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 இடங்களை வெல்லும் கூட்டணி ஆட்சி அமைக்கும். மஹாயுதி கூட்டணியில் பாஜக 148, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 80, அஜித் பவார் NCP 53 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மஹாவிகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 103, சிவசேனா UBT 89, சரத் பவார் NCP 87 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. Stay tuned with Way2News for live election updates..
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சில மணி நேரங்களில் எண்ணப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள வேண்டுமா? WAY2NEWSஇல் இணைந்திருங்கள்.
இந்திய வீரர் ரிஷப் பண்ட் நேற்று 2 சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக உலக கோப்பை டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 52 இன்னிங்ஸில் அவர், 2,032 ரன்களை எடுத்துள்ளார். முதல் 2 இடங்களில் ரோஹித் (2,685) கோலி (2,432) உள்ளனர். இத்துடன், பண்ட்(661) இத்தொடரில் ஆஸி.வில் அதிக ரன்களை எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 கட்ட சோதனைக்கு பிறகே தேர்தல் அலுவலர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முதலில் தபால் வாக்கு எண்ணப்படும் நிலையில், 9 மணி முதல் முன்னணி விவரங்கள் தெரியவரும்.
தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நவ.1ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.