News November 23, 2024

ஆசிய கோப்பை தொடர்: தகுதி சுற்றில் வீழ்ந்த இந்தியா

image

சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்தின் தகுதிச்சுற்றில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. 69-53 என்ற கணக்கில் கத்தார் அணியிடம் கடைசி வரை முயற்சி வீழ்ந்தது. அடுத்து வரும் 25ம் தேதி நடைபெறும் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் என்ற இக்கட்டான சூழலில் களம் காண உள்ளது.

News November 23, 2024

இந்தியாவே உற்றுப் பார்க்கும் பிரியங்கா காந்தி!

image

வயநாடு எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மகுடம் சூடுவாரா என்பது சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ரிசைன் செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை பிரியங்கா களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.

News November 23, 2024

2019 தோல்விக்கு பழிதீர்க்குமா பாஜக

image

ஜார்கண்டில் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி தேவை. 2019 தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்., 16, ஆர்ஜேடி மற்றும் சிபிஎம் தலா ஒரு தொகுதியை பெற்றன. இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 25 தொகுதிகள் கிடைத்தன. ஆனால், இந்த தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

News November 23, 2024

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை

image

கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோக்ரியும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாசும் பின் தங்கியுள்ளனர். ஏற்கெனவே ராகுல் காந்தி வசம் இருந்த தொகுதி என்பதால் பிரியங்காவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

News November 23, 2024

மகாராஷ்டிராவில் முன்னணி நிலவரம் வெளியானது

image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி 21 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால், சரிநிகர் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 23, 2024

வெற்றியை தீர்மானிக்கும் மகளிர் உரிமைத்தொகை

image

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பெண்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். காங்., ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹3000 வழங்கப்படும் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால், மகளிர் தொகை ₹2100ஆக உயர்த்தப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 23, 2024

மஹா விகாஸ் அகாதி கூட்டணியில் யார் முதல்வர்?

image

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படவுள்ள நிலையில் ‘MVA’ கூட்டணியில் யார் முதல்வர் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்தக் கூட்டணி பெரும்பான்மை பெறும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே தான் முதல்வர் என சோசியல் மீடியாவில் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆனால், எங்கள் கூட்டணியில் முதல்வர் யார் என்பதை பின்னர் பேசி முடிவெடுப்போம் என என்சிபி (SP) விளக்கம் அளித்துள்ளது.

News November 23, 2024

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் (8 AM) தொடங்கியிருக்கிறது. இத்துடன், வயநாடு இடைத் தேர்தல் முடிவுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் முன்னணி நிலவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களை உடனுக்குடன் பெற, வே2நியூஸ் உடன் இணைந்திருங்கள்.

News November 23, 2024

தேர்தல் ரிசல்ட்டே வரல.. அதுக்குள்ள அடிச்சிக்குறாங்களே..

image

மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளே இப்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், அதற்குள் யார் முதல்வர் என்பதில் அங்கு பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் முதல்வருக்கான ரேஸில் உள்ளனர்.

News November 23, 2024

ஐயப்பனை கொச்சைப்படுத்திய பா.ரஞ்சித்?

image

ஐயப்பனையும், அவருக்காக மேற்கொள்ளும் விரதங்களையும் கொச்சைப்படுத்தியதாக கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாடலைப் பாடிய பாடகி கானா இசைவாணி மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!