India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகராஷ்டிராவில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய தேவேந்திர பட்னவிஸ்-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றதால் பாஜக தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த மகிழ்ச்சி சற்று நேரம் கூட நீடிக்கவில்லை. நாக்பூர் தெற்கு (மேற்கு) தொகுதியில் போட்டியிட்ட பட்னவிஸ், காங்., வேட்பாளர் வினோத் ராவை விட குறைந்து வாக்கு வாங்கி பின்னடைவை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து ஏழாவது நாளாக தங்கத்தின் விலை கடும் உயர்வை கண்டிருக்கிறது. நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ₹57,800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ₹600 உயர்ந்து ₹58,400க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று ₹7,300ஆக உள்ளது. கடந்த ஏழு நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,920 உயர்ந்து அதிர்ச்சி தந்திருக்கிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ₹101ஆக உள்ளது.
வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தி 85,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 1,25,000 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் 40,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இதனால், பிரியங்கா காந்தியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
மகாராஷ்டிராவின் நாந்தேட் தொகுதி எம்பி வசந்தராவ் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான நிலையில் அந்தத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மறைந்த எம்பி வசந்தராவின் மகன் சவான் ரவீந்திர வசந்த்ராவ் பாஜக வேட்பாளரை விட 45 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 9 சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சமாஜ்வாதி முன்னிலை பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் கை ஓங்கியிருந்ததால், இந்த முறையும் அவர்கள் அதிக தொகுதிகளை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் கையே ஓங்கியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் உள்ளனர். ஷெவ்கான் தொகுதியில் பாஜக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி சுயேச்சை வேட்பாளர் சந்திரசேகர் மாருதிராவ் 6,990 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். கர்ஜட் தொகுதியில் சுதாகர் கரே, சிவசேனா வேட்பாளரை விட 945 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதேபோல், சந்த்காட், கோலாப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் உள்ளனர்.
மகாராஷ்டிரா, ஜார்கண்டில் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும், மேற்கு வங்கத்தில் எப்போதுமே நான் தான் என நிரூபித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. அங்குள்ள சீதாய், மதரிஹர், நைஹாதி, மெதினிபூர் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் TMC முன்னிலையில் உள்ளது. கொல்கத்தா பலாத்கார விவகாரத்தை, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக கையில் எடுத்தும், TMC-ஐ மக்கள் கைவிடவில்லை.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்களை விட பாஜக தலைமையிலான மஹா யுதி கூட்டணி 146 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 126 இடங்களிலும், மற்றவை 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 138 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 136 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளிலும், ஜேஎம்எம் 34 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவின் வொர்லி (Worli) தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை வகிக்கிறார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிண்ட் முரளி தியோரா பின்தங்கியுள்ளார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
Sorry, no posts matched your criteria.