News November 23, 2024

ரேஷன் அட்டைதாரர்களே.. இனி இது தாராளம்!

image

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் போதிய அளவு துவரம் பருப்பு கிடைப்பதில்லை என சமீபகாலமாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு டன் கணக்கிலான துவரம் பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், வரும் மார்ச் வரை 6 கோடி கிலோ துவரம் பருப்பு விநியோகிக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் அது தாராளமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

விதர்பாவை கைப்பற்றும் பாஜக

image

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் விவசாயம் சார்ந்த விதர்பா பகுதியின் வெற்றி மிக முக்கியமானது. பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் இங்கு பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனால், இம்முறை மீண்டு வந்து மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சுமார் 40 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. விதர்பாவுடன் மேற்கு மஹாராஷ்டிரமும் கைக்குள் வந்தால் பாஜக வெற்றி உறுதியாகிவிடும்.

News November 23, 2024

இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருக்கலாமே..

image

Whatsappல் புதிதாக Typing Indicator’ஐ மெட்டா நிறுவனம் அறிமுக செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. எதிர்முனையில் இருக்கும் நபர், டைப் செய்யும் போது, நமக்கு அவரின் contact கீழே typing என இப்போது காட்டும். அதனை தற்போது மாற்றி, மெசேஜ் வரும் இடத்தில் 3 புள்ளிகளை பொருத்திட சோதனை நடைபெற்று வருகிறதாம். இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே இருக்கலாமே….

News November 23, 2024

இந்தியா கூட்டணியை ஓரங்கட்டிய பாஜக

image

மஹாராஷ்டிராவில் தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டுமே தனித்து 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியோ வெறும் 60 இடங்களில் தான் முன்னிலையில் உள்ளது. இதனால் கடந்தமுறை போல் குதிரை பேரம் செய்யவோ, கட்சிகளை உடைக்கவோ பாஜகவுக்கு தேவையிருக்காது என்று நம்பலாம்.

News November 23, 2024

ஜோதிகாவுக்கு முன்பே நான் சொல்லிட்டேன்…கூல் சுரேஷ்

image

சென்னையில் நடைபெற்ற காக்கா பட நிகழ்வில் பேசிய கூல் சுரேஷ், கங்குவா படத்திற்கு முதலில் நானே குரல் கொடுத்தேன். பின்னால் தான் ஜோதிகா குரல் கொடுத்தார். இயக்குனர் சிவா, ஞானவேல் ராஜாவிடமும் வாய்ப்புகளை கேட்டேன். ஆனால், இப்பொது வரை வாய்ப்பே கிடைக்கவில்லை. கங்குவா படத்தில் உள்ள கதாபாத்திரங்களை பார்த்தால், அதில் நான் நடித்திருக்கலாமே என தோன்றும் என்பதால் கங்குவா படத்தை நான் பார்க்கவே இல்லை என்றார்.

News November 23, 2024

கேரளா இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை!

image

கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் உள்ளார். 6வது சுற்று நிலவரப்படி 24,332 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடத்தில் 23,868 வாக்குகள் பெற்று 464 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

News November 23, 2024

சரத் POWER-ஐ காலி செய்த அஜித் POWER

image

மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் அஜித் பவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சரத் பவாரின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் 21 தொகுதிகளில் 18இல் அஜித் பவர் துணையுடன் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, பாரமதி தொகுதியில் கடந்த 1999-2019 வரை தேசியவாத காங்., வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறை அஜித் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

News November 23, 2024

பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு கடும் பின்னடைவு!

image

பிஹாரில் நடந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்(Jan Suraaj) கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்தக் கட்சி போட்டியிட்ட தாராரி, ராம்கர், இமாம்கஞ்ச், பெலகஞ்ச் தொகுதிகளில் ஜன் சுராஜ் 3 மற்றும் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் 2ஆம் தேதி ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

10:30 மணி நிலவரம்: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி?

image

மகாராஷ்டிராவில் காலை 10:30 மணி நிலவரப்படி ஆட்சி அமைக்கத் தேவையான 145 தொகுதிகளைக் கடந்து பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக – 121, சிவசேனா(ஷிண்டே)- 56, என்சிபி(அஜித் பவார்) – 34 என மொத்தம் 211 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அங்கு காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் – 22, சிவசேனா(உத்தவ் தாக்கரே) – 20, என்சிபி(சரத்பவார்) – 11 தொகுதிகள் என 53 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

News November 23, 2024

ஜார்கண்டில் JMM+ கூட்டணி பெரும்பான்மை

image

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) & காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 11 மணி நிலவரப்படி, JMM+ 47 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 27 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 41 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் JMM+ அதனை தொட்டிருக்கிறது.

error: Content is protected !!