News November 23, 2024

EPS உடன் கருத்து வேறுபாடா? எஸ்.பி.வேலுமணி பதில்

image

சமீபகாலமாக, EPSக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு விளக்கமளித்து எஸ்.பி.வேலுமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கும் EPSக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மகனின் திருமண அழைப்பிதழை வழங்கவே நயினார் நாகேந்திரனை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

News November 23, 2024

Idea கொடுத்த டிரம்ப்: பிரபல டிவி சேனலை வாங்கும் மஸ்க்

image

அமெரிக்க செய்தி சேனலான MSNBC’யை X தளத்தின் CEO எலோன் மஸ்க் வாங்க திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. டிரம்ப் ஜூனியர், MSNBC விற்பனைக்கு உள்ளது என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், “விலை எவ்வளவு எனக் கேட்டிருந்தார். அதேபோல், 2017ல் டிவிட்டரை நீங்கள் வாங்கவேண்டும் என டேவ் ஸ்மித் என்பவர் குறிப்பிட, அப்போதும் விலை எவ்வளவு எனக் கேட்டிருந்தார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

அடுத்த CM என் தந்தைதான்: ஷிண்டே மகன் அதிரடி

image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியானதை அடுத்து, அடுத்த முதல்வர் ஃபட்னாவீஸா அல்லது ஏக்நாத் ஷிண்டேவா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீநாத் ஷிண்டே கூறுகையில், வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். என்னை பொறுத்தவரை, எனது தந்தை தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் எனக் கூறினார்.

News November 23, 2024

இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, இன்றும், நாளையும் மிதமான மழையும், நவ.25இல் இருந்து 4 நாளைக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி மயிலாடுதுறை நாகை, தஞ்சை, திருவாரூரில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 23, 2024

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கிடையாது: மூர்த்தி

image

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்துனான ஆய்வுக்கூட அனுமதி கிடையாது எனக் கூறிய அவர், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வராது என உறுதியளித்தார்.

News November 23, 2024

கங்குவாவை குறி வைக்கும் அட்லீ?

image

7 தாளம் தான் 7 ராகம் என மழுப்பினாலும், பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் அட்லீ. ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு, சல்மான் கான் படத்தை அட்லீ இயக்குகிறார் எனப்படுகிறது. இது ஒரு மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. உடனே, ரசிகர்கள் இப்போது அட்லீயின் டார்கெட் கங்குவா’வாக இருக்குமோ? என டவுட்டில் இருக்கிறார்கள். அட்லீ ஸ்டைல் கங்குவா எப்படி இருக்கும்…

News November 23, 2024

நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் அண்ணன் – தங்கை

image

நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்து வரும் நிலையில், அவருடன் தங்கையும் இணையவிருப்பதை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

News November 23, 2024

மகாராஷ்டிராவின் முதல்வர் யார்? 3 மணிக்கு பதில்

image

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விடையளிக்க, 3 மணிக்கு 3 தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். தேவேந்திர ஃபட்நாவிஸ் (பாஜக), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார், இந்த மூவரில் யார் முதல்வராக வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News November 23, 2024

பாஜகவின் அத்தனை ராஜ தந்திரங்களும் வீணாகிவிட்டதே!

image

மஹாராஷ்டிராவில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் உடைந்து எதிரெதிராக இருப்பது பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம். ஆனால், ஜார்க்கண்டில் ஆளும் ஹேமந்த் சோரனை (JMM கட்சி) வீழ்த்த பாஜக மேற்கொண்ட எல்லா தந்திரங்களும் தோல்வியில் முடிந்துள்ளன. ED வழக்கு, சிறைவாசம், CM பதவி ராஜிநாமா, நம்பிக்கை வைத்த சம்பாய் சோரன் செய்த துரோகம் எல்லாவற்றையும் தாண்டி வெற்றியை தொட்டிருக்கிறார் ஹேமந்த் சோரன்.

News November 23, 2024

இது சரித்திர வெற்றி: பூரித்து சொன்ன தமிழிசை!

image

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில், தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், அனைத்து மொழி பேசுபவர்களும் வசிக்கும் ஒரு குட்டி இந்தியா தான் மகாராஷ்டிரா. அதனால்தான், பாஜக அங்கு வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன். அங்கு பாஜக பெற்றிருப்பது சரித்திர வெற்றி எனக் கூறினார்.

error: Content is protected !!