India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் & ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். ஹிரோயினுக்கான தகுதிகள் இருந்தும், கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்காெலை செய்து கொண்டார். இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும், இன்னும் உண்மை வெளிவரவில்லை. மர்மம் நீடிக்கிறது.
பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ரொமாரியோ ஷெப்பர்ட் களமிறக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
தூக்கமின்மை, சரியான உணவின்மை, உடற்பயிற்சி இல்லாதது ஆகியவற்றால் கல்லீரல் பிரச்னை பலருக்கும் ஏற்படுகிறது. இந்நிலையில், உலக கல்லீரல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கல்லீரல் செயல்பாடு குறித்த பரிசோதனையை இலவசமாக செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நடிக்க வடிவேலு ₹25,000 சம்பளம் கேட்டாராம். ஆனால் அவ்வளவு தர முடியாது எனக் கூறி, அப்படத்தில் இருந்து வடிவேலுவை இயக்குநர் பாரதிராஜா நீக்கியுள்ளார். இதை தாங்க முடியாமல் வடிவேலு அழுது கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பியுள்ளார். இதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை மீண்டும் நடிக்க வைத்தாராம்.
ஹிட்லரின் ஆட்சியின்கீழ் ஜெர்மன் இருந்தபோது, பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. அதில், 1945 ஏப்ரல் 20ம் தேதி காச நோய் தடுப்பூசிக்காக 20 யூதக் குழந்தைகள் மீது கிருமிகள் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட நிகழ்வும் அடங்கும். அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட 20 குழந்தைகளும் தூக்கில் தொங்க விடப்பட்டு கொல்லப்பட்டனர். 80 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் 20ம் தேதிதான் அக்காெடூரம் நிகழ்த்தப்பட்டது.
IPL 2025 புள்ளிப்பட்டியலில் CSK அணி, 7 மேட்ச்சில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ஆனால், மனம் தளர தேவையில்லை. 2010-ல் இதேபோல தொடக்கத்தில், 7 மேட்ச்சில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த CSK, அடுத்தடுத்த மேட்ச்சில் வெற்றி பெற்று, முதல் முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அப்போது நிகழ்ந்த அந்த மேஜிக்கை மீண்டும் ஒரு முறை செய்துக் காட்டுவாரா தோனி?
முதல்வர் ஸ்டாலின் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். அவரிடம் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் அக்கட்சி சேர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அவை அனைத்தும் வதந்திகள் என்றும், அதில் உண்மையில்லை, திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில், துரை வைகோ – மல்லை சத்யா இடையேயான மோதல் பூதாகரமானது. துரை வைகோவுக்கு 40 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு மல்லை சத்யா கோரிக்கை வைத்துள்ளார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளரான அவர் பேசினார்.
IPL 2025-ல் சண்டிகரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிகள்பட்டியலில் பஞ்சாப் அணி முதல் இடத்துக்கு செல்லும்.
Sorry, no posts matched your criteria.