News November 23, 2024

அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படம், வசூலிலும் ரூ.300 கோடிக்கும் மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. அந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும், அதை பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அந்த படத்தை நெட்பிலிக்ஸ் ஓடிடி வாங்கியுள்ளதாகவும், அதை இந்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 23, 2024

மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாதவர் எச்.ராஜா: பாஜக

image

திமுக அரசின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாதவர் எச்.ராஜா என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக செய்தித் தாெடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியோரை விட்டு விட்டு, அதை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

News November 23, 2024

கருப்பு உடையில் கலக்கும் மின்னல்.. அசத்தல் ஸ்டில்ஸ்

image

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறைக்கு வந்து கலக்கி வருபவர் வாணி போஜன். சின்னத் திரை, வெள்ளித்திரை என்று கலக்கும் அவர், கருப்பு நிற மாடல் டிரஸ், கருப்பு கண்ணாடி என அசத்தலாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அவரின் அழகை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த புகைப்படங்களை காண வேண்டுமா? மேலே கிளிக் செய்து பாருங்கள்.

News November 23, 2024

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து EC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை கட்சி வாரியாக தெரிந்து கொள்வோம்.
– ஜேஎம்எம் : 34
– பாஜக : 21
– காங்கிரஸ் : 16
– ஆர்ஜேடி : 4
– இடதுசாரிகள் : 2
– ஜேடியு : 1
– பிற கட்சிகள் : 3

News November 23, 2024

நயன் சர்ச்சைக்கு மத்தியில் சிம்பு- தனுஷ் சந்திப்பு..!

image

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் – தரணீஸ்வரி ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது சிம்புவும், தனுஷும் சந்தித்து கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். நயன்தாராவுடன் தனுசுக்கு மோதல் நிலவும் நிலையில், சிம்புவும் அவரும் சந்தித்து கொண்டது திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இணையதளங்களிலும் 2 பேரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

News November 23, 2024

உங்களுக்கு ஆட்சிதான் போச்சு.. எனக்கு கட்சியே போச்சே..! (1/3)

image

உத்தவ் தாக்கரே நிலைமையை நினைத்தால்தான் பரிதாபமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது. INDIA கூட்டணித்தலைவர்கள் ஆட்சியமைக்க முடியவில்லையே என்ற கவலையில் இருக்க, தாக்கரேவோ கட்சியையே பறிகொடுத்துள்ளார். இனி அவரின் அரசியல் எதிர்காலம் என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

News November 23, 2024

உங்களுக்கு ஆட்சிதான் போச்சு.. எனக்கு கட்சியே போச்சே..! (2/3)

image

உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரே உருவாக்கிய கட்சிதான் சிவசேனா. தந்தை இறந்த பின் கட்சியை வழிநடத்திய உத்தவ், 2014 தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் மாநிலத்தின் 2ஆவது பெரிய கட்சியாக சிவசேனாவை வளர்த்தெடுத்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அவர், பாஜகவை கழட்டிவிட்டு, காங்., உடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். கழட்டிவிட்ட கடுப்பில் இருந்த பாஜக, பழிதீர்க்க காத்துக் கொண்டிருந்தது.

News November 23, 2024

உங்களுக்கு ஆட்சிதான் போச்சு.. எனக்கு கட்சியே போச்சே..! (3/3)

image

உத்தவ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடிக்க, சிவசேனாவில் இருந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட பல MLA-க்களை தங்கள் அணிக்கு தூக்கியது பாஜக. ஷிண்டேவை CM-ஆகவும் ஆக்கியது. சிவசேனா கட்சியும், சின்னமும் ஷிண்டேவுக்கு போனது. யார் உண்மையான சிவசேனா என்பது இந்த தேர்தலில் தெரியவரும் என தாக்கரே கூறியிருந்தார். ஆனால், ஷிண்டே சிவசேனா 57 இடங்களில் முன்னிலையில் இருக்க, உத்தவ் சிவசேனாவோ 20 இடங்களோடு சுருங்கிப் போனது.

News November 23, 2024

என்ன கிரிக்கெட் ரசிகர்களே ஐபிஎல் விருந்துக்கு ரெடியா!

image

2025 ஐபிஎல் மெகா ஏலம் ஜெட்டாவில் நாளை மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. 2 நாள்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஏலத்தை Star Sports தொலைக்காட்சி மற்றும் JioCinema மொபைல் செயலியில் இலவசமாக காணலாம். நாளை IND-AUS முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த கையோடு, ஏலமும் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சம விருந்து காத்திருக்கிறது.

News November 23, 2024

நயனை ஆதரிக்க இதுதான் காரணம்: பார்வதி

image

தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவிற்கு ஆதரவளித்தது ஏன் என நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளார். சுயமாக வளர்ந்த நயன், இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுதியிருக்க மாட்டார். சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தானும் அதுபோன்ற சம்பவங்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!