News November 24, 2024

சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம்: பிரபல நடிகர்

image

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் பேசும் போது, தமிழகத்தில் தரமான கல்வி கிடைக்காது’னு சொல்லி, பிள்ளைகளை மும்பையில் படிக்க வைக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். இங்குள்ள மாணவர்கள் கூடுதலாக மொழி ஒன்றைக் கற்றுக்கொண்டால் மட்டும் உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடுமா? என்ற கேள்வியை முன்வைத்து, சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

News November 24, 2024

அமெரிக்காவைவிட இந்தியா மேலானது.. மஸ்க் அதிரடி

image

தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், US தேர்தலில் 1.5 கோடி வாக்குகள் பதிவான கலிபோர்னியா மாகாண முடிவு 19 நாட்களாகியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். உங்க கருத்து என்ன?

News November 24, 2024

அடித்து தூக்கும் வெங்காய விலை! மிரட்டும் முருங்கை

image

மகாராஷ்டிராவில் பருவமழை தவறியதன் காரணமாக தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை ₹ 55 ஆக அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை ₹ 80-ஐ தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ முருங்கைக்காய் (சில்லறை கடைகளில்) ₹ 200-க்கு விற்பனையாகிறது. இதுதவிர, தக்காளி (1 கி) – ₹ 40, பீன்ஸ் – ₹ 80, கேரட் ₹ 100-க்கு விற்பனையாகிறது.

News November 24, 2024

தென் இந்தியாவை என்று கவனிக்கும் மத்திய அரசு?

image

மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பல தேர்வுகள் தென் இந்தியாவின் பண்டிகை நாட்களில் நடத்தப்படுவதும் அதற்கு கண்டனங்கள் வருவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் பொங்கல் அன்று CA தேர்வுகள் நடத்தப்படுவதை மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால், நமது பண்பாட்டு பண்டிகையான பொங்கலை தேர்வர்கள் தவறவிட நேரிடும்.

News November 24, 2024

டேட்டிங்கில் சிக்கிய விஜய் – ரஷ்மிகா

image

நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் காதலில் இருப்பதாக பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த பதிலையும் அவர்கள் இருவரும் சொன்னதில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்றது போன்ற போட்டோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, காதல் பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பேச்சும் டோலிவுட்டில் உள்ளது.

News November 24, 2024

11 முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடித்த இந்து வேட்பாளர்!

image

உ.பி.யில் பல ஆண்டுகளாக சமாஜ்வாடி கோட்டையாக இருந்த குந்தர்கி தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. 65% முஸ்லிம்கள் வசிக்கும் இத்தொகுதியில் பல கட்சிகள் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், சிங்கிள் இந்து வேட்பாளராக களம் கண்ட பாஜகவின் ராம்வீர் தாக்குர், அனைவரையும் தோற்கடித்து வாகை சூடியுள்ளார். முஸ்லிம்களுடன் பல ஆண்டுகளாக சகோதர உணர்வுடன் இவர் பழகி வந்ததே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

News November 24, 2024

₹20,000க்காக பறிபோன உயிர்

image

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் ₹20,000ஐ இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான அருண் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ₹20 ஆயிரத்தைக் கொண்டு ரம்மி விளையாடியிருக்கிறார். அதில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.

News November 24, 2024

என்று ஓயும் இந்த சூது மயக்கம்?

image

சூதில் தர்மனே அனைத்தையும் இழந்தான் என்று புராணம் இருக்கையில், நாம் எல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு நாளும் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை என்ற செய்தியை கேட்கும்போதெல்லாம் இதனை தடுக்க அரசு ஏதாவது செய்யாதா என்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனாலும், அரசாங்கம் ஏதோ கிணற்றில் போட்ட கல் போல இந்த விவகாரத்தை வேடிக்கை பார்க்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ!

News November 24, 2024

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

image

பேட்டி ஒன்றில் பேசும் போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஒரு Mock(கேலி) விருது விழாவில் அனைத்து பிரபலங்களையும் கலாய்க்கும் வகையில் நான் சில விஷயங்களை செய்தேன். அப்போது, மேடையில் SK எமோஷனலாக பேசியதை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் பேசிவிட்டேன். அது அப்போது தவறாக தெரியவில்லை. ஆனால், டிவியில் பார்த்தபோது எனக்கே தவறாக தெரிந்தது. உடனடியாக SK’விடம் மன்னிப்பு கேட்டேன் எனக் குறிப்பிட்டார்.

News November 24, 2024

IPL ஏலத்தில் முக்கியமான RTM

image

RTM (Right-to-Match) என்பது வீரர் ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஏலத்தின் போது, அவரை தக்கவைக்க உதவும். (எ.கா) DC’யில் விளையாடிய பண்ட்டை ₹10 கோடிக்கு CSK வாங்கினாலும், RTM பயன்படுத்தி DC அவரை தக்கவைக்கலாம். ஆனால், விலையை CSK ₹13 கோடியாக உயர்த்தினால், அவ்விலையை கொடுத்தே, பண்ட்டை DC’யால் தக்கவைக்க முடியும். இல்லையேல் பண்ட் CSK’யில் விளையாடுவார். Stay tuned with Way2News for IPL updates.

error: Content is protected !!