India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, நடைபெற்ற ஏலத்தில் ₹10.75 கோடிக்கு GT அணியால் வாங்கப்பட்டுள்ளார். மும்பை அணி அவருக்காக முதலில் Bidding’ஐ தொடங்கிய நிலையில், பெங்களூரு அணியும் முயற்சித்தது. இறுதியில் குஜராத் அணி 10.75 கோடிக்கு அவரை வாங்கியது. இதுவரை 80 மேட்சில் விளையாடி, 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரபாடா. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் நாளை (நவம்பர் 25) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் அன்னை மருத்துவக் கல்லூரி, எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரிக்கு தலா 50 இடங்களில் கூடுதலாக ஒதுக்கீடு செய்ததையடுத்து, மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்கள் 135 ஆக உள்ளது. ரேங்க் 1 – 28,219 வரையிலான மாணவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஐபிஎல் ஆக்ஷனின் முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங் 18 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். 2 கோடி Base Price இருந்த அவரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18 கோடிக்கு ஏலம் கேட்டது. உடனே அவருடைய சொந்த அணியான பஞ்சாப், அவரை RTM மூலம் தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அரசு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் வரும் 26ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு போட்டிகளை நடத்தவும் ஆணையிட்டுள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கு எந்த புதுப்படத்திலும் அஜித் கமிட்டாக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ மற்றும் விடாமுயற்சியின் ஷூட்டிங்கை வரும் டிசம்பருக்குள் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கார் ரேஸில் கவனம் செலுத்தும் வகையில், 2025 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் புதுப்படத்தில் கமிட்டாவார் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பாமக (PMK) நிறுவனர் ராமதாஸ், CM ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதாக கூறியுள்ளார். வரும் 29ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் அந்த அறிவிப்பை வெளியிட அவர் வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு IPL போட்டிக்கான வீரர்கள் ஏலம், சவூதி அரேபியா நாட்டில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் 577 இந்தியா, வெளிநாட்டு வீரர்கள் பெயர்கள் உள்ளனர். முன்னணி வீரர்கள் பல கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவலை துல்லியமாகவும், மிக விரைவாகவும் உடனுக்குடன் தெரிந்து காெள்ள WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
தனது 81வது சதத்தை நிறைவு செய்துள்ள விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக அதிக சதங்களை(7) விளாசிய ஆசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி, சச்சினின் ரெக்கார்ட்டை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், சச்சின் 6 சதங்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 IPL போட்டிக்கான ஏலம், சவூதி அரேபியாவின் ரியாத்தில் இன்றும், நாளையும் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும். இதற்கான ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் உள்ளனர். அவர்களில் 367 பேர் இந்திய வீரர்கள், 210 பேர் வெளிநாட்டு வீரர்கள். பண்ட் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பல கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிக்கெட் வீரர்களுக்கு இன்றும், நாளையும் ஜாக்பாட்தான்.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபுளோரிடாவில் உள்ள பங்களாவை பார்த்து, அதே ஸ்டைலில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை விஜய் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அமெரிக்கா போகும்போதெல்லாம் டாம் க்ரூஸின் அந்த Beach House-ஐ பார்த்து பிரமித்ததாகவும், அந்த தாக்கத்தில் அதே மாதிரி வீட்டை வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் வீட்டின் மதிப்பு ₹80 கோடி என்பது கூடுதல் தகவல்.
Sorry, no posts matched your criteria.