News November 24, 2024

அனைத்து கல்லூரிகளுக்கும் UGC உத்தரவு

image

ஃபிட் இந்தியா வாரத்தையொட்டி கல்லூரிகளில் உடல்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள UGC அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஃபிட் இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. நவ.31 வரை நடைபெறும் இந்த நிகழ்வில், யோகா, தற்காப்புக் கலை, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் மாணவர்களை 4-6 நாள்களுக்கு ஈடுபடுத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் UGC கேட்டுக்கொண்டுள்ளது.

News November 24, 2024

இஷான் கிஷனை தட்டி தூக்கிய SRH

image

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலம் தொடங்கியதும் அவரை ஏலத்தில் எடுக்க மும்பை, டெல்லி, பஞ்சாப் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இஷான் கிஷனை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துவிட்டோம் என்ற நினைத்தபோது கடைசியாக வந்த SRH இறுதியில் அவரை தட்டி தூக்கியது.

News November 24, 2024

IPL ஏலம்: 5 மணி நேரத்தில் ரூ.349 கோடி

image

2025 ஐபிஎல் ஏலம், சவூதி அரேபியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏலம், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து வீரர்களை ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்து வருகின்றனர். கடந்த 5 மணி நேரத்தில் (இரவு 8.30 மணி வரை) மொத்தம் 33 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.349 கோடியை அணிகள் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

News November 24, 2024

ராகுல் முற்றுப்புள்ளி வைப்பார்: துரை வைகோ

image

பாஜக வெற்றிக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பார் என துரை வைகோ MP ஆரூடம் கூறியுள்ளார். வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது எனக் குறிப்பிட்ட அவர், மகாராஷ்டிராவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுதான் NDA கூட்டணி வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டினார். மேலும், 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2024

‘வாத்தியார்’ இந்த தேதிலதான் வர்றாராம்!

image

‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி இரவு மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘தினம் தினமும்’ பாடலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. முதல் பாகம் நல்ல வெற்றியடைந்த நிலையில், 2ஆம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 24, 2024

கம்மி பட்ஜெட்டில் ஐரோப்பாவை சுற்றி பார்க்கலாம்..!

image

செக் குடியிருப்பில் உள்ள பராகுவேயில் தங்கும் விடுதிகள், உணவு, போக்குவரத்து அனைத்தும் குறைவு. ஒரு நாளைக்கு ₹3,500 – ₹4,500 இருந்தால் போதும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் நிரம்பிய போர்ச்சுகல் நாட்டில் ஒரு நாள் செலவுக்கு ₹4,000 – ₹5,000 போதும். கலாச்சாரத்திற்கு பெயர் போன ருமேனியாவில் ஒரு நாள் செலவு ₹2,500 – ₹3,500 ஆகும். ஹங்கேரி, போலந்தில் ஒரு நாளைக்கு ₹3,000 – ₹4,000 செலவாகும்.

News November 24, 2024

IPL-ல் இப்படிதான் சம்பளம் வழங்கப்படுகிறது

image

IPL ஏலத்தில் எந்த தொகைக்கு வீரர் வாங்கப்படுகிறாரோ, அதுவே அவர்களின் அந்த சீசனின் சம்பளமாகும். வரிகள் போக அந்த தொகை நேரடியாக வீரருக்கு வழங்கப்படும். Retain செய்யப்படும் வீரர்களுக்கு, முந்தைய ஏலத்தில் உறுதி செய்யப்பட்ட தொகைதான் சம்பளம். சீசன் தொடங்குவதற்கு முன்பே வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், சம்பளம் கிடையாது. போட்டியின் போது காயம் ஏற்பட்டால், வீரரின் மருத்துவ செலவுகளை அணி நிர்வாகம் வழங்கும்.

News November 24, 2024

4 லட்சம் விவசாயிகள் தற்கொலை.. ஆய்வில் அதிர்ச்சி!

image

நாடு முழுவதும் 1995 முதல் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது உச்ச நீதிமன்றத்தின் உயர்நிலைக் குழுவின் இடைக்கால அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பஞ்சாபில் 3 அரசுப் பல்கலை. மூலம் வீடு வீடாக நடத்தப்பட்ட கள ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 16,606 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. கடன் சுமை உள்ளிட்ட விவசாயிகள் விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

News November 24, 2024

ஆன்லைனில் முன்பதிவு..அரசு பஸ்களில் 10% கட்டண தள்ளுபடி

image

CM ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆட்சியின்கீழ் போக்குவரத்து துறை புரிந்த சாதனைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து வகை பஸ்களிலும் விழா நாள்கள் நீங்கலாக இதர நாள்களில், ஆன்லைனில் இருவழி டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

‘லக்கி பாஸ்கர்’ OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

image

துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்ட‘லக்கி பாஸ்கர்’ படம், வரும் 30ம் தேதி Netflix தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்.31ஆம் தேதி வெளியான இப்படம், ‘அமரன்’ மாஸ் வெற்றிக்கு மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி அழுத்தமான திரைக்கதை அமைக்கப்பட்டது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம்.

error: Content is protected !!