News November 25, 2024

குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

image

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் உள்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, அதானி விவகாரம் அவையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 25, 2024

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி டீ

image

கொத்தமல்லி டீ செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் என்கிறார்கள். கொத்தமல்லித் தழையை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதில் சுக்குத்தூள், வெல்லம் கலந்தால் கொத்தமல்லி டீ ரெடி.

News November 25, 2024

மனைவிதான் உற்ற துணை: விராட் கோலி

image

தன்னுடைய ஏற்ற இறக்கங்களின்போது, அனுஷ்கா சர்மா தான் துணையாக இருந்து வருவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக ஒருநாளும் விளையாடியது இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்திய அணிக்காக விளையாடும்போது ஒவ்வொரு போட்டியையும் பெருமையாக நினைப்பதாகத் தெரிவித்தார். ஆஸி.கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் கோலி சதம் விளாசினார்.

News November 25, 2024

நவ. 25: வரலாற்றில் இன்று

image

*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பலத்த சூறாவளியில் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்ததில் 30,000 பேர் உயிரிழப்பு. *1866 – அலகாபாத் ஐகோர்ட் திறப்பு. *1930 – ஜப்பானில் ஒரே நாளில் 690 நிலநடுக்கங்கள் பதிவு. *1936 – ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்து. *1941 – லெபனான் பிரான்சிடம் இருந்து விடுதலை. *1949 – இறுதி செய்யப்பட்ட அரசியலமைப்பில் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.

News November 25, 2024

வாக்காளர் சிறப்பு முகாமில் 14 லட்சம் பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் சிறப்பு முகாமில் மொத்தம் 14,00,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் கடந்த 17, 18ஆம் தேதிகளிலும், 23, 24ஆம் தேதிகளிலும் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

News November 25, 2024

விரிவான அறிக்கை வேணும்: வைகோ

image

அதானி விவகாரத்தில் FM விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதானி செய்த முறைகேடுகள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதனை பார்லிமென்டில் முக்கிய பிரச்னையாக விவாதிக்க வேண்டும் என்றார். ஒப்பந்தங்களை பெற பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

News November 25, 2024

ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

image

*வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். *வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது. *முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். *நான் யாரையும் நம்புவதில்லை, என்னையே கூட நம்புவதில்லை. *எழுத்தாளர்கள் மனித ஆன்மாக்களின் பொறியாளர்கள்.

News November 25, 2024

முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் ETF ஆர்வம்

image

சில்லறை முதலீட்டாளர்கள் ETF முதலீட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றான இந்த ETF நிதிகளில் அக்டோபர் மாதம் ₹13,441 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய மாதம் வெறும் ₹381 கோடியாக இருந்துள்ளது. நிதியை நிர்வகிப்பதற்கான Expense Ratio குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News November 25, 2024

ஸ்ரேயஸ் ஐயரின் முதல் ரியாக்‌ஷன் இதுதான்..!

image

ஸ்ரேயஸ் ஐயரை PBKS ₹26.75 கோடிக்கு வாங்கிய உடன், அவர் தனது ரியாக்‌ஷனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பஞ்சாப் குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், சீசன் தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடப்பு சாம்பியனாக இருந்து வரும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் இருந்து வந்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ அதிக விலை கொடுத்து அவரை KKR வாங்க முன் வரவில்லை.

News November 25, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 109 ▶குறள்: கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். ▶பொருள்: முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும் அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

error: Content is protected !!