India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 CSK Squad: ருதுராஜ் கெய்க்வாட், MS தோனி, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, சிவம் துபே, அஷ்வின், நூர் அகமது, கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரண், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், தீபக் ஹூடா, முகேஷ் செளத்ரி, ஷேக் ரஷீத், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், கமலேஷ் நாகர்கோட்டி, ஷ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) சட்டமன்ற குழுத் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராட்டியத்தில் 95 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வென்றது. வோர்லி தொகுதியில் கடந்த முறை 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆதித்யா தாக்கரே, இந்த முறை வெறும் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது பயனில் உள்ள PAN அட்டைக்குப் பதிலாக, க்யூஆர்கோடு உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் மத்திய அரசு விரைவில் PAN 2.0 அட்டையை அறிமுகம் செய்யவுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கெனவே பயனில் உள்ள PAN அப்டேட் செய்யப்பட்டு, அனைவருக்கும் புதிய அட்டை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
IPL ஏலத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளார் அன்ஷுல் கம்போஜ். CSK அணி இவரை ஏலத்தில் ₹3.40 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் குறித்து முன்னரே அஸ்வின் பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அவர் பேசும் போது, ஏலத்தில் கம்போஜிற்கு பலத்த போட்டி இல்லாவிட்டால் ஆச்சர்யப்படுவேன். குறித்துவைத்துக் கொள்ளுங்கள், இவரிடம் அசாத்திய திறமை உள்ளது. பவர்பிளேயில் 5 ஓவர் வீசினால் 15 ரன்கள் கொடுக்கிறார் என பேசியிருந்தார்.
திமுக ஆட்சியில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த இறப்பும் நேரவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இபிஎஸ்-க்கு ஞாபக மறதி அதிகம்; தனது ஆட்சிக்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என விமர்சித்த அவர், எங்கு இறப்பு நடந்தாலும் அரசை குறை கூறுவதை தவிர அவருக்கு வேறு வேலை கிடையாது என்று சாடினார். மேலும், காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். அப்படித்தான் ராமதாஸூக்கும் என விமர்சித்தார்.
IPL ஏலத்தில், இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க முதல் சுற்றில் எந்த அணியும் முன்வரவில்லை. அர்ஜுன் டெண்டுல்கர் 2021 முதல் 2024 வரை MI அணியில் இருந்தார். அடிப்படை விலையாக ₹30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வாங்க MI கூட இம்முறை முன்வரவில்லை. 2021 முதல் MI இருந்தாலும், அவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பிரபல நடிகை த்ரிஷா, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒருவருக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய உண்மையான காதல் எதுவென்றால் உங்களை ஒருவர் உண்மையானவராக இருக்க விடுவதும், உங்களின் புதிய பரிமாணங்களை ஏற்றுக் காெள்வதும்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து மீண்டும் அவர் காதலில் விழுந்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்கள்.
ரெட் அலர்ட் போன்ற மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டால், முதல் நாள் இரவே விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதல் மாவட்டமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் லீவ் இருக்கா, இல்லையா என குழப்பமடைந்துள்ளனர்.
PHD மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஆராய்ச்சி நிதியுதவி பெற வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று TN அரசு அறிவித்துள்ளது. PHD மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் முழுநேரமாக பயிலும் பிஎச்டி ஆய்வு மாணவர்கள் தலா 10 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000, இதர செலவுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. கூடுதல் தகவலை www.tanscst.tn.gov.in தெரிந்து கொள்ளலாம்.
Paytm UPI Liteல் ஆட்டோ டாப்-அப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. வாலட் பேலன்ஸ் நிர்ணயித்த வரம்பிற்குக் கீழே செல்லும் போது, ஆட்டோ டாப்-அப் நிகழும். இதனை பயன்படுத்த, முதலில் யூசர்ஸ் தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, குறைந்தபட்ச இருப்பு வரம்பை நிர்ணயிக்க வேண்டும். மேலும், ஆட்டோ டாப்-ஆப்பிற்கான ரீசார்ஜ் தொகையையும் தேர்வு செய்யணும். யூசர்ஸ் வாலட் லிமிட்டை ₹2,000 வரை உயர்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.