India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோலார் பேனல் மூலக் கூறுகள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு அளித்த வரிச் சலுகையை சீனா குறைத்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவில் ஏற்றுமதி மானியம் 13%இல் இருந்து 9%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சோலார் செல்களின் விலை 40% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 Kolkata Knight Riders Squad: ரிங்கு, வருண், நரைன், ரசல், ஹர்ஷித் ராணா, ராமன்தீப், வெங்கடேஷ் ஐயர், டி காக், குர்பாஸ், நார்ட்ஜே, ரகுவன்ஷி, அரோரா, மார்கண்டே, ரோவ்மேன் பவல், மனீஷ் பாண்டே, ஸ்பென்சர் ஜான்சன், லுவ்னித் சிசோடியா, ரஹானே, அனுகுல் உம்ரான், மொயின்.
ராமதாஸ் தொடர்பான முதல்வரின் விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சேகர்பாபு கூறியுள்ளார். ராமதாஸ் தொடர்பாக எந்த அவதூறான வார்த்தையும் யாரும் பேசவில்லை என்று கூறிய அவர், நடைமுறையில் உள்ள வார்த்தைகளை மட்டுமே முதல்வர் பேசியதாகவும் அவர் விளக்கம் தெரிவித்தார். முன்னதாக, ராமதாஸூக்கு வேறு வேலையே இல்லை என முதல்வர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செம்பருத்திப்பூ டீ சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதய நோய்கள், இனப்பெருக்க உறுப்பு நோய்களைத் தடுக்கும் என்கிறார்கள். ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து, தேவையான நீரில் கொதிக்க விடுங்கள். அதை வடிகட்டி எலுமிச்சை சாறு, வெல்லம் கலந்தால் சுவையான செம்பருத்திப்பூ டீ தயார். Share it.
ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் பல வீரர்களுக்கு ஜாக்பாட் அடித்தாலும், பல முன்னாள் ஐபிஎல் வீரர்களுக்கு சோதனையாகவே அமைந்தது. SRH அணிக்காக 2016இல் கோப்பையை வென்று தந்த வார்னர் மெகா ஏலத்தில் 2 முறை ஏலத்திற்கு வந்தும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. அதைப்போல் மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், முருகன் அஸ்வின் ஆகியோரையும் எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை.
தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிச. 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
*1817 – கொழும்புவில் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்கள், படகுகள் கடலில் மூழ்கின. *1842 – புகழ்பெற்ற நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் தொடக்கம். *1949 – அம்பேத்கர் சமர்பித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்பு. *2002 – நாகாலாந்தில் தனிநாடு கோரும் அமைப்புகள் மீதான தடை நீக்கம். *2008 – மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலி. *2013 – இலங்கையில் பயணிகள் காசோலை நடைமுறை நிறுத்தம்.
2025 Delhi Capitals Squad: ராகுல், அக்சர், குல்தீப், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், ஸ்டார்க், புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், நடராஜன், கருண், சமீர் ரிஸ்வி, அசுதோஷ், மோஹித், ஃபாஃப் டு பிளெசிஸ், முகேஷ், நல்கண்டே, விப்ராஜ் நிகம், சமீரா, ஃபெரீரா, அஜய் குமார் மண்டல், மன்வந்த் குமார் மண்டல், திரிபுராண விஜய், மாதவ் திவாரி.
‘சொர்க்கவாசல்’ படத்திற்கு A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. ஆர்.ஜே.பாலாஜிக்கு திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இப்படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
*குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கற்களை எறிந்துகொண்டிருந்தால், நீங்கள் உங்கள் இலக்கை அடைய மாட்டீர்கள். *நாம் வெற்றி பெற்றால் யாரும் கவனிக்க மாட்டார்கள். நாம் தோல்வியடைந்தால் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். *வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்பட்டது. *வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது அபாயகரமானது அல்ல, தொடர்வதற்கான தைரியம்தான் முக்கியமானது.
Sorry, no posts matched your criteria.