News November 26, 2024

கண்களை சிவக்கச் செய்யும் காய்ச்சல்.. எச்சரிக்கை

image

கண்களை சிவக்கச் செய்யும் பாதிப்புடன் கூடிய காய்ச்சல் அதிகரித்து வருவதால், ஜனவரி மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் சிறார்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கண்ணில் நீர் வடிதல், சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைவதால், குழந்தைகள், சிறார்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

News November 26, 2024

இன்னும் வங்கிக்கு திரும்பாத ₹6,967 கோடி எங்கே?

image

₹6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் RBI-க்கு திரும்ப வரவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மே 19, 2023 அன்று ₹2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில், நவ.1ஆம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான 98.04% நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளன. 2018-19இல் போதுமான அளவு புழக்கத்திற்கு வந்ததால், ₹2,000 அச்சடிப்பது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

இந்தியாவை உலுக்கிய நாள் இன்று

image

மும்பை தீவிரவாத தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. கடந்த 2008ஆம் ஆண்டு மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் 164 பேரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுதந்திர இந்தியா வரலாற்றில் மிகக்கொடூரமான தாக்குதலாக இது அறியப்படுகிறது. இந்திய வரலாற்றின் இக்கருப்பு நாளை நினைவு கூர்வோம்.

News November 26, 2024

நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தஞ்சையும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பிற்காக இன்று நடைபெறவிருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

News November 26, 2024

அதானியின் காசு வேண்டாம்: தெலங்கானா அரசு

image

Young India Skills University-காக அதானி கடந்த அக். 18ஆம் தேதி கொடுத்த ₹100 கோடியை திருப்பி தர தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதானி மீது அமெரிக்க நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், தெலங்கானா இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு ஒப்பந்தங்கள் எதுவானாலும் ஜனநாயக முறைப்படி டெண்டர் விடுவது முக்கியம் எனவும் அம்மாநில CM ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

News November 26, 2024

10 ஆண்டுகளில் 5 லட்சம் ரயில்வே வேலை

image

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை 5 லட்சம் பணியாளர்களை பணியமர்த்தி உள்ளதாக மினிஸ்டர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2004 முதல் 2014 வரை 4.4 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததாகக் கூறினார். ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக வேலைவாய்ப்பு அட்டவணை அறிமுகமாகிறது என்ற அவர், தற்போது 12,000 இணைப்பு பெட்டிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

News November 26, 2024

நோய்களைத் தீர்க்கும் கபாலீஸ்வரர்!

image

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற புகழை கொண்டது திருமயிலை கபாலீஸ்வரர் கோயில். 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது. கற்பகாம்பாள் மயில் வடிவெடுத்து பூஜித்ததால், ‘மயிலாப்பு’ என பெயர் பெற்ற இத்தலத்திற்கு வந்து கபாலி தீர்த்தத்தில் நீராடி, கபாலீஸ்வரரை சேவித்து மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்து, வீடு திரும்பினால் உடல் & மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

News November 26, 2024

மூன்று மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

மேலும் வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 2 தினங்களில் இது தமிழ்நாடு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

image

டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று இரண்டு மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநில காரைக்கால் பகுதி பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!