News November 26, 2024

வெளிநாடு செல்லும் இந்தியர் இவ்வளவா?

image

வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2021-ல் 1.32 லட்சம் பேர் வெளிநாடு சென்ற நிலையில், 2022-ல் 3.73 லட்சம் பேரும், 2023-ல் 3.98 லட்சம் பேரும் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். இஸ்ரேல், கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத், சவுதி, ஓமன், UAE நாடுகளுக்குத்தான் இந்தியர்கள் அதிகளவு செல்கின்றனர்.

News November 26, 2024

ஜியோ, ஏர்டெலுக்கு ஆப்பு வைக்க தயாராகும் மஸ்க்..!

image

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், Direct-to-cell Satellite Communications டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மொபைலும் செயற்கைக்கோளும் நேரடியாக கனெக்ட் செய்யப்படுவதால் இனி சிம் கார்டு தேவைப்படாது. முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த சேவை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

News November 26, 2024

ATM மெஷினில் பணமழை.. பெண்ணுக்கு அதிர்ச்சி!

image

ஏடிஎம் மெஷினில் இருந்து தானாகக் கொட்டிய பணத்தை நேர்மையாக வங்கியில் ஒப்படைத்த பெண்ணுக்கு வங்கி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் அழகு நிலையம் நடத்தி வரும் துர்கா செல்வம், நேற்று அதேபகுதியில் உள்ள HDFC வங்கி CDM மெஷினில் பணம் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, அந்த மெஷினில் இருந்து சரசரவென கீழே கொட்டிய ரூ.49,000 ரொக்கத்தை எடுத்த அவர் நேர்மையாக வங்கியில் ஒப்படைத்தார்.

News November 26, 2024

நம் தேசம், நமது மக்கள், நமது அரசியலமைப்பு: கமல்

image

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், அதில் பொதிந்துள்ள லட்சியங்களையும் மறுபரிசீலனை செய்வோம் என கமல் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், நம் தேசம், நமது மக்கள், நமது அரசியலமைப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆட்சிக்கான வரைபடத்தை மட்டுமல்ல, சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையையும் விட்டுச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

News November 26, 2024

ஊழியருக்கு ₹41.6 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

image

சிறிது நேரம் தூங்கியதற்காக நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ₹41.6 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டுமென சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் இயங்கிவரும் ரசாயன நிறுவனமொன்றில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வந்தவர் ஜாங். நள்ளிரவு வரை அவர் பணியை தொடர்ந்ததால், சற்று ஓய்வெடுத்து உள்ளார். அது கொள்கைக்கு மாறாக இருப்பதாகக் கூறி அவரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

News November 26, 2024

மகாராஷ்டிராவில் தொடரும் இழுபறி

image

மகாராஷ்டிர சட்டமன்ற பதவிக்காலம் இன்று நிறைவடைய இருக்கும் நிலையிலும் புதிய முதல்வர் யார் என்ற முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. பெரும்பான்மை கட்சியான பாஜக தேவேந்திர ஃபட்னவிஸை முதல்வராக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால், இன்று முதல்வர் பதவியேற்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News November 26, 2024

தனுஷ்- ஐஸ்வர்யா வழக்கில் நாளை தீர்ப்பு

image

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் டைவர்ஸ் வழக்கு நடந்து வந்தாலும், இருவரும் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றாற்போல், கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தனர். ஆனால், கடந்த 21ஆம் தேதி நடந்த விசாரணையில், இருவரும் நேரில் ஆஜராகி பிரிவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினர்.

News November 26, 2024

RBI கவர்னருக்கு என்ன பாதிப்பு? அப்போலோ விளக்கம்

image

இந்திய ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நெஞ்செரிச்சல் காரணமாக நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 26, 2024

9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

image

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

PAN 2.0: பழைய PAN எண் இனி வேலை செய்யுமா?

image

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் PAN 2.0 திட்டம் அறிமுகமாக உள்ளது. இதில், PAN கார்டில் QR Code இடம்பெற்றிருக்கும். இதனால், நடைமுறையில் உள்ள PAN எண் வேலை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போதைய PAN எண் மாறாது, அந்த கார்டையும் பயன்படுத்தலாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதேநேரம், புதிய PAN கார்டு பெறுவதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் உறுதிபடுத்தியுள்ளது.

error: Content is protected !!