News November 26, 2024

ஃபெங்கல் பெயர் ஏன்?

image

நாளை உருவாகவிருக்கும் புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அனைத்திற்கும் வெப்பமண்டல சூறாவளி பிராந்திய அமைப்பு பெயர் சூட்டுகிறது.. அது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்தும் பெயர்களை வாங்கி வரிசைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஃபெங்கல் என்ற பெயர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தது ஆகும்.

News November 26, 2024

‘கெத்து’ மனைவி பட்ட கஷ்டத்தை பாருங்க..!

image

‘லப்பர் பந்து’ நடிகை ஸ்வஸ்விகா, 10 ஆண்டுகளாக தமிழ் பட வாய்ப்பே கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ப்ளஸ் 2 படித்த தனக்கு நடிப்பைத் தவிர, வேறு எங்கும் வேலை கிடைக்காது எனவும், பட வாய்ப்பு இல்லாத போது சீரியலில் நடித்ததாகவும், அங்கும் வாய்ப்பு இல்லாத போது VJ ஆக வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், லப்பர் பந்து ஹிட்டுக்கு பிறகு அம்மா கேரக்டரில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.

News November 26, 2024

நாளை உருவாகிறது ’புயல்’

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘ஃபெங்கல் (Fengal)’ என்று பெயரிடப்படவுள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்வதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

நேருக்கு நேர் மோதும் தனுஷ் – நயன்தாரா

image

தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகும் ஏப்.10 ஆம் தேதியிலேயே தனது ஆக்ஷன் படமான ராக்காயியை வெளியிட நயன்தாரா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படக் காட்சியை பயன்படுத்த NOC வழங்க தனுஷ் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராக நயன்தாரா எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியத்துடன் பெரும் மோதலாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

முதல்வரை கண்டித்த பாமகவினர் கைது

image

வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு பங்கு உண்டா என்று முதல்வர் விளக்க வேண்டும் என ராமதாஸ் கூறியிருந்தார். அதுகுறித்து பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ராமதாசுக்கு வேலை இல்லை” என்று விமர்சித்திருந்தார். அவரது பேச்சைக் கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News November 26, 2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 நாள்களில் தமிழகம், இலங்கை கடற்பகுதியை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

News November 26, 2024

திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்

image

ஆஸி.,யில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், திடீரென தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்தியா திரும்பியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக தாயகம் திரும்பியுள்ளதாகவும், டிச.3ஆம் தேதி, மீண்டும் அவர் ஆஸி., திரும்ப உள்ளதாகவும் BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2ஆவது டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி தொடங்க உள்ளது.

News November 26, 2024

தட்டச்சர்களை பணி நிரந்தரப்படுத்த சிறப்புத் தோ்வு

image

தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த TNPSC ஆணையம் சிறப்பு போட்டித் தேர்வு நடந்த உள்ளது. வேலைவாய்ப்பு & பயிற்சித் துறை சார்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தட்டச்சராக பணியாற்றுவோர் இதற்கு டிச. 24ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப். 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News November 26, 2024

JUST IN: ராஜினாமா செய்தார் ஷிண்டே

image

மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு பதவியேற்க வசதியாக, தன் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஷிண்டே சமர்ப்பித்தார். இதையடுத்து புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் காபந்து முதல்வராக செயல்படுவார். சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணி 235 இடங்களை வென்று ஆட்சியமைக்க உள்ளது. பட்னவிஸை முதல்வராக்க BJP முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News November 26, 2024

₹1.2 லட்சம் சம்பளம் எல்லாம் பத்தாது…

image

அரசு வேலையில் இல்லாத மணமகனை கல்யாணம் செய்ய மாட்டேன் எனக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., ஃபரூக்காபாத்தில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், மணமகள் குடும்பத்தினர் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். விஷயமறிந்த மணமகன் தான் மாதம் ₹1.2 லட்சம் சம்பளம் பெறுவதை எடுத்துக்கூறியும், கட்டினால் கவர்மெண்ட் மாப்பிள்ளையதான் கட்டுவேன் என அப்பெண் கூறி நிராகரித்துள்ளார்.

error: Content is protected !!