News November 26, 2024

முதல்வர் பயணம் ரத்து

image

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முதல்வரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நவ.28, 29ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி, கள ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 26, 2024

நாளை கடைசி: TMB வங்கியில் 170 பணியிடங்கள்

image

TMB வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.27) கடைசி நாளாகும். ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் பெற்ற 26 வயதிற்கு உட்பட்டவர்கள் https://www.tmbnet.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். SHARE IT.

News November 26, 2024

லட்சிய இந்தியா எதிரொலிக்கிறது: CM ஸ்டாலின்

image

என்றும் பரிணமித்து கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட லட்சிய இந்தியா எதிரொலிக்கிறது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் அரசியலமைப்பு தினத்தையொட்டி Xஇல் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

₹27 கோடியில் பண்ட்-க்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

image

IPL ஏலத்தில் ₹2 கோடி எனும் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட ரிஷப் பண்ட்டை வாங்க பல அணிகள் போட்டி போட்டன. இறுதிவரை மல்லுக்கட்டிய LSG அணி ₹27 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இத்தொகையை LSG அணி அவருக்கு 3 கட்டங்களாக வழங்கும். இதில், ₹8.1 கோடியை அரசு வரி பிடித்தம் செய்யும். மீதம் ₹18.9 கோடியை அவர் ஊதியமாக பெறுவார்.

News November 26, 2024

நாளை இரண்டு மாவட்டங்களில் அதி கனமழை

image

தமிழகத்தில் நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

சென்னையில் அடர்ந்த பனிமூட்டம், மழை!

image

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிமீ வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காலை 9.30 மணி வரை சென்னையில் கடும் பனி மூட்டம் நிலவியது. தற்போது அடர்ந்த பனிமூட்டத்துடன் மழையும் பெய்து வருவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்கின்றன.

News November 26, 2024

Big Boss-ல் இருந்து வெளியேறும் VJS?

image

Big Boss அடுத்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளதாக மநீம மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு கூறியுள்ளார். AI டெக்னாலஜி பற்றி படிக்க சென்றதாலே கமலால் இந்த சீசனை கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் சீசன் விறுவிறுப்பு இல்லாமல் டல் அடிப்பதாக கூறப்படும் ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது.

News November 26, 2024

டிரம்ப் போடப்போகும் முதல் கையெழுத்து இதுக்குதான்!

image

ராணுவத்தில் உள்ள Transgenders-ஐ நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் திருநங்கைகள் ராணுவத்தில் சேர்வதை தடை செய்யும் கோப்புகளிலும் அவர் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வரும் 15,000 திருநங்கைகள் பாதிப்படைய உள்ளனர். 2025 ஜன.20-ல் டிரம்ப் பதவியேற்றதும், முதல் உத்தரவாக இதில் கையெழுத்திட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 26, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) மேரி கியூரி பிரித்து அறிந்த உலோகம் – பொலோனியம் 2) ISI – Indian Standards Institution 3) சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.20 நிமிடங்கள் எடுக்கும் 4) கீரிப்பிள்ளையின் அறிவியல் பெயர் – ஹெர்பெஸ்டிடே 5) ‘கடல் கொண்ட தென்னாடு’ நூலின் ஆசிரியர் – கண்ணதாசன் 6) ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் சட்டம் பயின்ற முதல் இந்தியப் பெண் – கொர்னேலியா சொராப்ஜி 7) ECOSOC 1945 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. <<14711491>>கேள்விகளைப் பார்க்க<<>>

News November 26, 2024

விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

image

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் இங்கு உள்ளதாகவும், அவர்கள் மீதான எத்தகைய வன்முறையையும் அரசு சகித்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் தினசரி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக விஜய் வேதனை வெளிப்படுத்தினார்.

error: Content is protected !!