News November 27, 2024

தகுதியற்ற கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பெயர் நீக்கம்

image

கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து சுமார் 44 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இவர்களில் 18 லட்சம் பேர் இறந்தவர்கள், 2 லட்சம் பேர் ஆதார் விவரங்களை அளிக்காதவர்கள். அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 3.23 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

விஜய் சேதுபதி, மாரி செல்வராஜ் கூட்டணி?

image

விஜய் சேதுபதி – மாரி செல்வராஜ் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘வாழை’ பட வெற்றியைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, கார்த்தி நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு விஜய் சேதுபதியின் பட பணிகள் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

News November 27, 2024

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

News November 27, 2024

புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகம் 45% சரிவு

image

புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகம் அக்டோபர் மாதத்தில் 45% சரிந்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் புதிதாக 16 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டன. இது நடப்பாண்டில் 7.80 லட்சமாக சரிந்துள்ளது. எனினும், மே மாதத்தின் 7.60 லட்சத்துடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகமாகும். கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் செலவுகள் 13% அதிகரித்து, ₹1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News November 27, 2024

2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வம்

image

2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா வளர்ந்து வரும் விளையாட்டு சக்தி என்றார். மேலும், இந்தியாவுடன் இந்தோனேஷியா, எகிப்து, துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் 2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

News November 27, 2024

இதுல பிரதமருக்கு தொடர்பு இல்ல: ஹெச்.ராஜா

image

அதானி விவகாரத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லையென பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வங்கதேச அரசு மின்சாரத்திற்கான தொகையை தரவில்லை எனவும், அமெரிக்கா நிர்பந்தம் செய்தும் அதானி மின்சாரம் விநியோகிக்காததால் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகக் கூறினார். மேலும், லஞ்ச புகார் எழுந்துள்ள 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில்லை என்றார்.

News November 27, 2024

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை டீ

image

கொய்யா இலை டீ ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். செரிமான பிரச்னையைச் சரி செய்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். ஒரு கப் நீரில் தேவையான அளவில் கொய்யா இலைகளைக் கொதிக்க விட வேண்டும். அதில் ஏலக்காய், வெல்லம் சேர்த்து வடிகட்டினால் கொய்யா இலை டீ ரெடி. ட்ரை செய்து பாருங்கள்.

News November 27, 2024

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை

image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். உதகையில் உள்ள ராஜ்பவனில் அவர் தங்குகிறார். இந்நிலையில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News November 27, 2024

நன்கொடையை வாரி வழங்கும் வாரன் பபெட்

image

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் ₹9,250 கோடி மதிப்பிலான தனது பெர்க் ஷயர் நிறுவன பங்குகளை 4 அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். தனது இறப்புக்குப் பிறகு இந்த சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு தனது 3 வாரிசுகள் படிப்படியாக வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 94 வயதாகும் வாரன் பபெட்டின் சொத்து மதிப்பு ₹12.35 லட்சம் கோடியாகும்.

News November 27, 2024

நவ. 27: வரலாற்றில் இன்று

image

*1935 – கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு முதல் விமானம் மதராசில் இருந்து வந்து இறங்கியது. *1964 – பனிப்போர்: அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும்படி அமெரிக்காவையும், ரஷ்யாவையும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கேட்டுக்கொண்டார். *1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் வகையில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிப்பு. *1977 – தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார்.

error: Content is protected !!