India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக வலைதளங்களை குறிப்பாக X- தளத்தை குறைவாக பயன்படுத்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அது நமது நேரத்தை விழுங்கிவிடுவதாகவும், மற்றவர்களின் எண்ணத்தை நமது திணிக்கும் ஊடகமாக சமூக வலைதளங்கள் மாறி இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த பேச்சிற்காக எலான் மஸ்க் தனது கணக்கை பிளாக் செய்தால், அதுவே தனது முதல் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தம் என்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் எனவும், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் இஸ்ரேல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், போர் நிறுத்தம் முழுமையாக அமலாவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டிச.1ம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் தமிழகம் திரும்பியதும் பல்வேறு அரசியல் செயல்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘என் மண் என் மக்கள்’ 2ம் கட்ட நடைபயணத்திற்கு அவர் தயாராக உள்ளதாகவும், கடந்த தேர்தல்களில் பாஜக சிறப்பாக செயல்பட்ட தொகுதிகளை குறிவைத்து நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலாக உள்ளது. தற்போது நீலகிரி, பெரம்பலூர், கோவை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை வழங்கினால், ₹10 திரும்ப வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கே.எல்.ராகுல், இதில் 3ஆவதாக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியதால், ஜெய்ஸ்வாலுடன் அவர் ஓப்பனிங் இறங்குவார். ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆனால், துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறையில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும்.
நம்ம ஏரியாவில் ஒரு பையன் ஒல்லியா இருந்தா அந்தப் பையனுக்கு “புரூஸ் லீ”-ன்னு பட்டப்பெயர் வைச்சிடுவாங்க. இது உலக வழக்கம். இப்பெயருக்கு அப்படி ஒரு மவுசு. அது சரி! மறைஞ்சு 51 வருஷம் ஆகியும், இன்னும் உலகமே ஞாபகம் வச்சு இருக்காங்கன்னு, அதுவே அவரின் மகுடம். வாழ்வில் வெற்றி பெற தடை ஒன்றும் இல்லை என்பதை உலகிற்கு கூறியவர். Happy B’day Bruce Lee. உங்கள் வாழ்வில் புரூஸ் லீ தாக்கம் எத்தகையது?
ஊக்கமருந்து சோதனைக்காக தனது மாதிரியை தர மறுத்ததால் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மார்ச்சில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தற்காலிக இடைநீக்கம் செய்த நிலையில், தற்போது உலக மல்யுத்த குழுவும் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால், மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி, அவரால் வெளிநாட்டில் பயிற்சியாளர் வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாது.
நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 670 கிமீ தெற்கு-தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் இந்த மண்டலம், இன்று ‘ஃபெங்கல்’ புயலாக வலுப்பெறவுள்ளது. இப்புயல் மேலும் படிப்படியாக நகர்ந்து 30ஆம் தேதி இரவு சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னணி சர்வதேச ரேட்டிங் எஜென்ஸியான மூடிஸ் நிறுவனம், அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டை ‘Stable’ என்ற நிலையில் இருந்து ‘Negative’ என்ற நிலைக்கு மாற்றியுள்ளது. அதேபோல் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும், அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் மதிப்பீட்டை குறைத்துள்ளது. இதனால் பன்னாட்டு நிதி திரட்டும் திறன் மற்றும் அதானி குழுமத்தின் நிதி நிலமை மோசமடையலாம் என கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.