India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து பாலிவுட் வரை சென்றுவிட்டார். இதனையடுத்து ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ”AntoNY x KEerthy ( Iykyk)” என்ற அவரது பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரயில்வேயில் காலியாக உள்ள 5,647 அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் காேரப்பட்டுள்ளது. வயது வரம்பு 3.12.2024 தேதிப்படி 15-24ஆக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உண்டு. வேலைக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. <
தெலங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் பூரி தொண்டையில் சிக்கி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 6ம் வகுப்பு பயிலும் வீரேன் ஜெயின் என்ற அந்த மாணவன், பள்ளியில் மதிய நேரத்தில் 3 பூரியை ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான். அந்த பூரி தொண்டையில் சிக்கிக் கொள்ள, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் ஒவ்வொரு மழையின் போதும் மக்கள் அவதியடைவதாக இபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார். திமுக அரசு துரிதமாக செயல்படாததால், மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், வானிலை மைய ஆலோசனையை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இனியாவது இந்த அரசு விழித்தெழுந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாலையோரம் நிற்கும் லாரிகளுக்கும் போக்குவரத்து போலீஸ் ஆன்லைனில் அபராதம் விதிப்பதைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய அச்சங்கத் தலைவர் தன்ராஜ், போக்குவரத்து போலீசின் இந்த நடவடிக்கை குறித்து புகார் அளித்தும் தீர்வு காணப்படவில்லை என்றார். இதற்கு தீர்வு கிடைக்கவில்லையேல் 2025 ஜனவரியில் ஸ்டிரைக் அறிவிக்கப்படும் என்றார்.
தங்கள் மீதும், நிறுவனத்தின் மீதும் சுமத்தப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் US ஊழல் நடைமுறை சட்டத்தை (FCPA) மீறியதாக கூறும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும், அதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியுள்ளது. முன்னதாக, அந்நிறுவனம் சோலார் ஒப்பந்தங்களுக்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
தஞ்சை அரசு ஹாஸ்பிடலில் வயிற்று வலி என வந்த 9ம் வகுப்பு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியிடம் விசாரித்ததில், அதே பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை காதலிப்பதாகவும், குழந்தைக்கு அவர் தான் தந்தை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இதற்கு காரணமான 15 வயது மாணவனை கைது செய்த போலீசார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
க்யூ ஆர் கோடுடன் கூடிய PAN 2.0 அட்டைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஏற்கெனவே PAN அட்டை வைத்திருப்போர் புதிதாக வரவுள்ள PAN 2.0 அட்டையை விண்ணப்பித்து பெற வேண்டுமா? என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று பதிலளித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்திருக்கிறது. நேற்று ₹56,640க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,840ஆக உள்ளது. கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென யு-டர்ன் அடித்து உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இசைவாணியை கைது செய்யாத தமிழக போலீஸ் இந்து மதத்திற்கு எதிரானதா என எச்.ராஜா சந்தேகம் எழுப்பியுள்ளார். கார்த்திகை மாதத்தில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இசைவாணி பாடியுள்ளதாகவும், அவர் மீதும், இயக்குனர் ரஞ்சித் மீதும் கடும் நடவடிக்கை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகள் தைரியமாக பரபரப்பட்டு வருவதாகவும் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.