News November 27, 2024

SC, ST மக்களை அவமதிக்கிறது காங்கிரஸ்: பாஜக பதிலடி

image

EVM இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் SC, ST, OBC பிரிவு மக்கள் வாக்குகள் வீணாவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய பாஜக எம்பி சம்பித் பத்ரா, கார்கேயும், காங்கிரஸ் கட்சியினரும் EVM இயந்திரத்தில் கூட வாக்களிக்க தெரியாத மக்களாக SC, ST, OBC பிரிவினரை நினைப்பதாக சாடினார். இது அந்தப் பிரிவு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

News November 27, 2024

4 ஆண்டு தடை அரசியல் சதி: புனியா குற்றச்சாட்டு

image

4 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை அரசியல் சதி என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சாடியுள்ளார். தேசிய அணி தேர்வின்போது ஊக்க மருந்து பரிசோதனைக்கு சிறுநீர் அளிக்க மறுத்ததாக கூறி NADA தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய புனியா, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை ஆதரித்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது என சாடியுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தந்தவர் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2024

கூகுள் மேப்பை SAFE ஆக பயன்படுத்துவது எப்படி?

image

1) பழைய கூகுள் மேப்பை பயன்படுத்த வேண்டாம். புதிய வெர்ஷன் கூகுள் மேப்பை டவுன்லோடு செய்யுங்கள். அடிக்கடி கூகுள் மேப்பை புதிதாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். 2) கூகுள் மேப் வேகமான வழி (FASTEST ROUTE) என மாற்று வழியை காண்பித்தால் கவனம் தேவை. 3) கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது STREET VIEWS அம்சத்தை பயன்படுத்துங்கள். 4) Narrow Roads அல்லது வித்தியாசமான அறிகுறிகளை கூகுள் மேப் காட்டினால் மிக கவனம்.

News November 27, 2024

நாடாளுமன்றத்தில் நாளை முதல் பிரியங்கா குரல்!

image

வயநாடு மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற பிரியங்கா காந்தி, நாளை காலை 11 மணிக்கு எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழையப் போகிறார் பிரியங்கா. இதனால் நாளை முதல் அவரது குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப் போகிறது. அவரது கன்னிப் பேச்சை கேட்க அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலாக உள்ளனர்.

News November 27, 2024

JOB ALERT: கர்நாடகா வங்கியில் வேலைவாய்ப்பு

image

கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள CUSTOMER SERVICE ASSOCIATE வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர <> https://karnatakabank.com/careers<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் நாடு முழுவதும் உள்ள கர்நாடகா வங்கியின் கிளைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 27, 2024

சென்னை மக்களே அலர்ட்

image

இன்னும் சற்று நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகவுள்ள 11 துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மக்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

News November 27, 2024

PAN 2.0 அட்டை: மத்திய அரசு விளக்கம்

image

PAN 2.0 அட்டை செய்தி வந்தது முதல், பழைய அட்டை செல்லுமா? புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? என பல கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய PAN அட்டையில் விரும்பினால் இலவசமாக திருத்தம், அப்டேட் செய்யலாம். அதன்பிறகு புதிய E-PAN மின்னஞ்சல் முகவரிக்கு வருமெனக் கூறியுள்ளது. புதிய PAN அட்டை வேண்டும் எனில், ரூ.50 கட்டினால் வீட்டுக்கே அனுப்பப்படுமென தெரிவித்துள்ளது.

News November 27, 2024

9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் அந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 3ஆம் எண் புயல் கூண்டு எனில், திடீர் காற்றோடு மழை பொழியும் என அர்த்தமாகும்.

News November 27, 2024

விஸ்வகர்மா திட்டத்தை TN அரசு செயல்படுத்தாது: ஸ்டாலின்

image

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை TN அரசு செயல்படுத்தாது என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

News November 27, 2024

COAL INDIA நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

COAL INDIA நிறுவனத்தில் காலியாக உள்ள 640 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.28) கடைசி நாளாகும். மைனிங், சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பதவிகளுக்கு அக்.29 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு 60% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பொறியியல் துறையில் இளங்கலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலை www.coalindia.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

error: Content is protected !!