News November 27, 2024

MISS YOU ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

image

ஃபெங்கல் புயல் எச்சரிக்கையால் ‘MISS YOU’ பட ரிலீஸை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சித்தார்த் நடித்துள்ளார். முன்னதாக நவ.29ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

News November 27, 2024

ராகுலிடம் ஆசி பெற்ற பிரியங்கா காந்தி

image

வயநாட்டில் வென்றதற்கான சான்றிதழை ராகுலிடம் காட்டி, தங்கை பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். ராகுல் காந்தி அவருக்கு இனிப்பு ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில், புதிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

தேங்காய் விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு

image

தமிழர்களின் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான தேங்காயின் விலை, தற்போது கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு, சபரி மலை சீசன் ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் விலை ரூ.40-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் 1 கிலோ தேங்காய் விலை என்ன? கீழே பதிவிடுங்க.

News November 27, 2024

ஜெயம் ரவி – ஆர்த்தியிடம் சமரச பேச்சுவார்த்தை

image

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து, சமரச தீர்வு மையத்தில் இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இருவரும் தங்களின் கருத்தை தெரிவித்ததை அடுத்து, விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News November 27, 2024

98 ரன்களில் அயர்லாந்தை சுருட்டிய வங்கதேசம்

image

அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி வங்காளதேச மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ODI இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய BAN 252/4 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாட துவங்கிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 98 ரன்னில் சுருண்டது. இதன் மூலம்154 ரன் வித்தியாசத்தில் BAN வெற்றி பெற்றது.

News November 27, 2024

போர் நிறுத்தத்திற்கு இந்தியா வரவேற்பு

image

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா (ஈரான் ஆதரவு) இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “இந்த முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது. இந்த முன்னேற்றம் பரந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் PM, US அதிபர் தனித்தனி உரையில் அறிவித்திருந்தனர்.

News November 27, 2024

மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்: விஜய்

image

ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகள் நினைவாக பல இடங்களில் இலங்கைத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும் எனக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தையொட்டி மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

News November 27, 2024

விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக: அண்ணாமலை

image

டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக, இந்த ஆண்டு சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

News November 27, 2024

கார் மோதி பலியான 5 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

மாமல்லபுரம் அருகே <<14724305>>கார் மோதி<<>> பலியான 5 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற செய்தி குறித்து கேள்விப்பட்டு தாம் பெரும் துயரமும் வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். 5 பேர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் CM நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News November 27, 2024

‘பாகுபலி’ நடிகருக்கு திருமணம் முடிந்தது

image

‘பாகுபலி’ படத்தில் அனுஷ்காவின் முறை மாமனாக ‘குமார வர்மன்’ கேரக்டரில் நடித்தவர் நடிகர் ‘சுப்பராஜு’. 47 வயதாகும் அவருக்கு சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது மனைவியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் M.குமரன், போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

error: Content is protected !!