News November 28, 2024

நவ. 28: வரலாற்றில் இன்று!

image

*1893 – நியூசிலாந்தில் பெண்கள் முதன்முறையாக வாக்களித்தனர். *1912 – உதுமானியப் பேரரசிடம் இருந்து அல்பேனியா விடுதலை. *1964 – செவ்வாய் கிரகத்துக்கு மரைனர் 4 என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 1987 – இந்தியப் பெருங்கடலில் தென்னாப்பிரிக்க விமானம் விழுந்ததில் 159 பேர் பலி. *1997 – இந்திய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ராஜினாமா. *2006 – நேபாள அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான ஆயுத மேலாண்மை ஒப்பந்தம் முடிவு.

News November 28, 2024

வக்பு வாரிய மசோதா குறித்து இன்று தீர்மானம்

image

வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு கால அவகாசம் வேண்டுமென கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பார்லிமென்டில் இன்று தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 28, 2024

இன்று பூஜையுடன் தொடங்கும் SK24 படப்பிடிப்பு?

image

சிபி சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் SK-க்கு ₹60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SK-வின் 23ஆவது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள். *இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது. *ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

News November 28, 2024

தொண்டர்களுக்கு கமலா ஹாரிஸ் ஆறுதல்

image

தன் கட்சித் தொண்டர்களின் சக்தியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக தனது ஆதரவாளர்களுக்காக பேசி வீடியோ வெளியிட்டுள்ள அவர், தேர்தல் முடிவுகளுக்கு முன்பு இருந்த சக்தியும், நோக்கமும் இப்போதும் அவர்களிடம் இருப்பதாகக் கூறினார். எப்போது, யாராலும், எந்த சூழ்நிலையிலும் உங்களின் சக்தியைப் பறிக்க முடியாது என்றார்.

News November 28, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 112 ▶குறள்: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. ▶பொருள்: நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை. அது, வழிவழித் தலைமுறையினருக்கும் பயன் அளிப்பதாகும்.

News November 28, 2024

தாய்லாந்தை அதிரடியாக வீழ்த்தியது இந்தியா

image

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி வீரர்கள், 11 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தனர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 28, 2024

இன்றைய (நவ.28) நல்ல நேரம்!

image

▶நவம்பர் – 28 ▶கார்த்திகை – 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 01:15 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: ஆம் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ▶நட்சத்திரம்: சித்திரை காலை 09.07 மணி வரை

News November 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!