India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக தங்க மதிப்பீடு கவுன்சில் அறிக்கையில், இந்தியர்கள் வீட்டில் 23,537 டன் தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் 854 டன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசிடம் இருப்பதை விட மக்களிடம் 3 மடங்குக்கும் மேல் தங்கம் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ₹193 லட்சம் கோடி. இது 2024 இறுதியில் ₹200 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ‘லைரானா’ பாடல் மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ‘ஜரகண்டி’, ‘ரா மச்சா மச்சா’ பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொள்ள, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வந்தனர். அப்போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் சீனிவாசன், விஜய், கலை, வசந்தகுமார் உட்பட 6 பேர் பலியாகினர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை விஜய் இன்று நேரில் அழைத்து தலா ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், இறந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் விஜய் ஏற்றுள்ளார்.
திமுக ஆட்சியில் புதிய வேளாண் மின் இணைப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 1,38,592 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 3 வருட திமுக ஆட்சியில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கெடுபிடிகள் இன்றி மின் இணைப்பு தரப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பெங்கல் புயல் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தற்காலிக புயல் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், புயல் வடிவில் அது இலங்கையை முதலில் கடக்கிறது. பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி கரையை கடக்கிறது. அதனாலேயே அதற்கு தற்காலிக புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளர் உட்பட 50 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர். கட்சியில் யாருக்கும் மரியாதை இல்லை என்றும், சீமானை சந்திக்கவே முடியவில்லை எனவும் அவர்கள் குமுறியுள்ளனர். குறிப்பாக நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு, சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாதகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இணையத்தில் கசிந்த ஆபாச வீடியோ தொடர்பாகக் கேரள நடிகை திவ்யா விளக்கம் அளித்துள்ளார். பாயல் கபாடியா இயக்கத்தில் கடந்த 22ம் தேதி வெளியான ‘All We Imagine as Light’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடித்துள்ள நடிகை திவ்யா பிரபா, வீடியோவை சேர் செய்யும் 10% நபர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. கதைக்காக மட்டுமே இப்படி நடித்தேன், புகழுக்காக இல்லை எனக் கூறியுள்ளார்.
சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது 2018-இல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
எதிர்காற்று வீசுவதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் தற்காலிக புயலாக உருவெடுக்கும். புயலாக மாறி மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நவ.30இல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் இன்று இரவு முதலே மழை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலைமையின்கீழ் குண்டர்கள் செயல்படுவதாக AAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 1990களில் மும்பையில் நிலவிய நிழலுலக தாதாக்களின் ஆதிக்கத்தை போல, இப்போது டெல்லியிலும் குண்டர் ராஜ்ஜியம் நடக்கிறது. வணிகர்களை மிரட்டுவது, துப்பாக்கிச் சூடு & வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டிற்கு அமித்ஷாவே காரணம் என சாடினார்.
Sorry, no posts matched your criteria.