News November 29, 2024

ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்

image

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கி. எதிரான டெஸ்டில் 93 ரன்னில் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த வகையில் சச்சின் (27 முறை) முதலிடத்திலும், டிராவிட் 12 , டிவில்லியர்ஸ் 12, ஹெய்டன் 11, பாண்டிங் 11, சேவாக் 10 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News November 29, 2024

ஆட்டிப்படைக்கும் காற்றுமாசு.. கட்டுப்பாடு விதித்த SC

image

டெல்லியில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்றுமாசு காரணமாக டெல்லி மக்கள் வாழ்வதே மிக கடினமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பான வழக்கில், சி.என்.ஜி., எல்.என்.ஜி., பி.எஸ் 4 டீசல் லாரிகள், மின்சார வாகனங்கள் இயக்க அனுமதி அளித்துள்ள SC, டிச.2 வரை தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2024

ராசி பலன்கள் (29-11-2024)

image

➤மேஷம் – தனம் ➤ ரிஷபம் – சுபம்
➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – நன்மை
➤சிம்மம் – செலவு ➤கன்னி – மேன்மை
➤துலாம் – சாதனை ➤விருச்சிகம் – ஆதாயம்
➤தனுசு – சாந்தம் ➤மகரம் – புகழ்
➤கும்பம் – பக்தி ➤மீனம் – உற்சாகம்.

News November 28, 2024

இவர் யார் தெரியுமா?

image

மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணும் 2 சிறுவர்களும் ஒருவரே. தற்போது திரையுலகில் மிகவும் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்திய அளவில் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகர்களில் அவரும் ஒருவர். திரையில் அவர் பெயர் வந்தாலே அரங்கமே அதிரும். அவர் சொன்னால் எதையும் செய்யும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. யாரென கண்டுபிடித்தீர்களா? கண்டுபிடித்தீர்கள் எனில், அவர் பெயரை கீழே கமெண்ட்களில் பதிவிடுங்கள்.

News November 28, 2024

6 மாவட்டங்களுக்கு Red Alert

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற வாய்ப்பில்லை, தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. இருப்பினும், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கான Red Alert விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூருக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு காலையில் லீவ் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 28, 2024

இனி ஒரு மாசம் தான் டைம்: தமிழக அரசு முக்கிய உத்தரவு!

image

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை 3 நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த மனுக்களுக்கு, ஒரு மாதத்துக்குள் தீர்வு காணும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இனி இவை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 28, 2024

திமுக நிராகரிக்கிறது: கனிமொழி

image

விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரிப்பதாக கனிமொழி MP தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், சாதி அமைப்பும், பெற்றோர்களின் தொழிலை பிள்ளைகள் ஏற்க வேண்டும் என்ற குலத்தொழில் முறையையும் அந்த திட்டம் ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டினார். அதனால் தான் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது எனக்கூறி CM ஸ்டாலின் மிகத் தீவிரமாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

News November 28, 2024

கண் கலங்கி உருகிய விஜய்..!

image

தவெக மாநாட்டுக்கு வரும் வழியில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்கினார் விஜய். அப்போது அவர்களிடம், மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால், இப்படியொரு சூழலில் சந்திக்க வேண்டியதாயிற்று எனக் கூறி விஜய் கண்கலங்கியுள்ளார். மேலும், என்ன தேவை இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் விஜய் கூறியதாக நிதியுதவி பெற்றவர்கள் கூறினர்.

News November 28, 2024

75 ஆண்டுகளாக ஓடும் இலவச ரயில்! இத்தனை வசதிகளா?

image

இந்தியாவில் ஒரு ரயில் சகல வசதிகளுடன் இலவசமாக ஓடுகிறது என்று சொன்னால், யாராலும் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். அந்த ரயிலின் பெயர் பகாரா – நங்கல் ரயில். இமாச்சலில் உள்ள பகாரா – நங்கல் இடையேயான 12 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான சட்லெஜ் நதியையும், பசுமையான சிவாலிக் மலைகளையும் இந்த ரயில் கடந்து செல்கிறது. மற்ற ரயில்களை போல எல்லா வசதிகளும் இதிலும் உள்ளன.

News November 28, 2024

இன்று இரவு வெளியாகிறது விடாமுயற்சி டீசர்?

image

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசர் இன்று இரவு 11:08 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

error: Content is protected !!