News April 20, 2025

இத்தாலியில் கைதிகளுக்கான பாலியல் அறை திறப்பு!

image

இத்தாலியில் கைதிகள் தங்களது துணையுடன் உடலுறவில் ஈடுபட பாலியல் அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய உம்பிரியாவை சேர்ந்த கைதி ஒருவர் தனது காதலியை தனிமையில் சந்திக்க அனுமதி கோரி கோர்ட்டை நாடினார். இதனை விசாரித்த கோர்ட் சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணை (அ) நீண்டகால காதலர்களை 2 மணி நேரம் தனிமையில் சந்திக்க அனுமதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.

News April 20, 2025

தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை: CM ஸ்டாலின்

image

தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை; ஒத்திப்போடவே சொல்கிறோம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை TN தீவிரமாக அமல்படுத்தியதால், மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. தற்போது அதன் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால் MP தொகுதிகள் குறையும். எனவே, அந்த அளவுகோலை தான் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.

News April 20, 2025

பிளே ஆப்பிற்கு வாய்ப்பில் நீடிக்குமா CSK?

image

இனி வரும் அனைத்து மேட்ச்சுமே CSK-வுக்கு மிக முக்கியமானதாகும். இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி, 2-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 7 மேட்ச்சிலும் வென்றால் தான், பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும். பேட்டிங்கில் சொதப்பும் CSK-வில் இன்று அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் எனப்படுகிறது. பிளே ஆப்பிற்கு CSK முன்னேறுமா?

News April 20, 2025

BREAKING: 24 மணி நேரத்தில் 65 முறை நிலநடுக்கம்!

image

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 65 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இதில், சுரல்லாவின் தென்மேற்கில் இருந்து 96 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டதே சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 349 முறையும், ஒரு மாதத்தில் 1,306 முறையும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

News April 20, 2025

திமுக கூட்டணியில் பாமக? CM ஸ்டாலின் மறுப்பு

image

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்ற கேள்விக்கு CM ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தற்போது பலமாக இருப்பதால் எவ்வித மாற்றமுமில்லை என்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) அங்கம் வகித்த பாமக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்னும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதி காத்து வருகிறது.

News April 20, 2025

அதிமுக துரோகம் செய்து விட்டது: CM விமர்சனம்

image

பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக TN மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதே கூட்டணியை திமுக 2 முறை தோற்கடித்திருக்கிறது என்றார். மூன்றாவது முறையாகவும் தோற்கடிப்போம். 2024ல் இரு கட்சிகளும் பிரிந்தது போல நடித்தன. அப்போதே ரகசிய கூட்டு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தேன். இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது என கூறினார்.

News April 20, 2025

சிக்கன் விலை கடும் சரிவு!

image

சிக்கன் விலை இன்று(ஏப்.20) சரிவைக் கண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டை ₹4.15 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதேபோல், முட்டைக் கோழி ஒரு கிலோ ₹85-க்கும், கறிக்கோழி ₹6 குறைந்து ₹80-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் கிலோ ₹130-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?

News April 20, 2025

புதிய கலரை கண்டுபிடிச்ச ஆராய்ச்சியாளர்கள்..!

image

கலிபோர்னியா யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் யாரும் பார்த்திராத ஒரு கலரை கண்டுபிடித்ததாக சொல்கின்றனர். அந்த கலருக்கு, ‘Olo’ என்றும் பெயரிட்டுள்ளனர். கண்களின் விழித்திரையில் (Retina) இருக்கும் வெவ்வேறு செல்கள் லேசருடன் தூண்டப்படும்போது இந்த கலர் தோன்றும் எனக் கூறுகிறார்கள். தற்போது வரை, உலகில் 5 பேர் மட்டுமே இந்த கலரை பார்த்துள்ளனர். அவர்கள், இதை ‘நீல-பச்சை’ காம்பினேஷன் என்கின்றனர்.

News April 20, 2025

சன்டேவில் சங்கடம்: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீன்களின் விலை வழக்கத்தை விட கிலோவுக்கு குறைந்தபட்சம் ₹100 வரை அதிகரித்துள்ளது. அதுவும் விடுமுறை நாளான இன்று மீன்கள் விலை உயர்ந்திருப்பது, அசைவ பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் மட்டன், சிக்கனுக்கு மாறியுள்ளனர்.

News April 20, 2025

திமுக நிர்வாகி தங்கராசு மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

image

திமுக மூத்த நிர்வாகியும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான தங்கராசு காலமானார். தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராசுவை கடந்த 1-ம் தேதி மினிஸ்டர் MRK பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த நிலையில், அவரும் தங்கராசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!