India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது X கணக்கை Delete செய்துள்ளார். இதுகுறித்து கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், தனுஷ் பற்றி நடிகை நயன் வெளியிட்ட அறிக்கை பெரிய சர்ச்சை ஆனதால் அவரது ரசிகர்கள் விக்னேஷை வறுத்தெடுத்தனர். மேலும் பேட்டி ஒன்றில் தான் அஜித்திற்காக எழுதிய கதை நிராகரிக்கப்பட்டது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கும் விமர்சனத்திற்கு உள்ளத்தால் Delete செய்திருக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
18 வயதுக்கும் குறைந்த மனைவியுடன் உடல் உறவு வைப்பது ரேப் குற்றம் என்று மும்பை ஐகோர்ட் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கொன்றை விசாரித்த கோர்ட், திருமணம் செய்த 18 வயதுக்கும் குறைந்த பெண்ணுடன் அவர் ஒப்புதலுடன் உறவு வைத்தாலும் அது ரேப்தான் என தீர்ப்பளித்தது. மேலும் ஏற்கெனவே அந்த வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக மூடப்பட்டு இருந்த சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை இன்று தமிழகம் திரும்ப உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு லண்டனுக்கு மேல் படிப்புக்காக அவர் ஆகஸ்ட் மாதம் சென்றிருந்தார். அவருக்கு பதிலாக பாஜக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவே கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து அண்ணாமலை புறப்பட்டு இன்று வரவிருப்பதாகவும், கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை இரவுக்குள் அகற்ற பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா மருத்துவமனை ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்து துறவி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜே.என். ரே ஹாஸ்பிட்டல், வங்கதேச நோயாளிகளை இனி அனுமதிக்க மாட்டோம் என தடாலடியாக அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கான சிகிச்சையை இத்துடன் நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 115 ▶குறள்: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. ▶பொருள்: ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணிவரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என IMD தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஃபெஞ்சல் புயல் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி, இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளாக முழுமையாக கரையை கடந்தது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி, அடுத்து பகல் இரவு ஆட்டமாக அடிலெய்டில் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி PINK நிற பந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இதே மைதானத்தில் 2 அணிகளும் PINK பந்து டெஸ்ட் போட்டியில் 2020ஆம் ஆண்டில் மோதியுள்ளன. அதில் இந்தியா மிகவும் குறைவாக 36 ரன்களில் ஆட்டமிழந்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
Sorry, no posts matched your criteria.