India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தின் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று கல்வி நிலையங்கள் செயல்படாது.
புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது. முதல் பாதி 12-12 என சமநிலையில் இருந்தது. 2ஆவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினரை ‘ஆல்-அவுட்’ செய்த டெல்லி அணி 32-21 என்ற கணக்கில் போட்டியை வென்றது. இதுவரை விளையாடிய 14 போட்டியில், 5இல் வென்ற தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 43 புள்ளிகளுடன் (6 வெற்றி) 8ஆவது இடத்தில் உள்ளது.
✍உண்மை ஆழமானது; உருவமற்றது. ✍ரத்தம் தோய்ந்த கையைவிட பிறருக்காக இறங்காத இதயம் மோசமானது. ✍ஒழுக்கமுள்ள மனிதன் யாருக்கும் கட்டளையிடுவதில்லை; யாருக்கும் கீழ்ப்படிவதுமில்லை. ✍எதிர்காலத்திற்கு பயப்படாதீர்கள்; கடந்த காலத்திற்காக அழாதீர்கள். ✍ஞானமுள்ளோர் அன்பை விரும்புவர்; அன்புள்ளோர் ஞானத்தை விரும்புவர். ✍காதலின் வலி மிகவும் இனிமையானது. ✍மதத்தின் உடன்பிறந்த சகோதரி சுயநலம்.
▶டிச. – 02 ▶கார்த்திகை – 17 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7.30 PM – 09.00 PM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: பரணி & கார்த்திகை ▶நட்சத்திரம்: கேட்டை.
‘அமரன்’ படத்தை கமல்ஹாசன் தயாரிக்க முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 2021இல் இந்தியில் வெளியான ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். இப்படம் மறைந்த ராணுவ வீரர் பத்ராவின் பயோ-பிக் ஆக வெளியானது.
இந்த படத்தின் வெற்றியை பார்த்துதான் தனக்கு ‘அமரன்’ படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததாக கமல் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணியின் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. அதில் அவருக்கு பதில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் ஆஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸி.அணிக்கு, 2ஆவது டெஸ்டில் ஜோஷ் விளையாடாதது சரிவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா உட்பட BRICS அமைப்பில் உள்ள 9 நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என, USA அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 100% வரி விதிக்கப்படும். இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் இலையில் உள்ள ஒலியூரோபீனுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலிவ் இலை பொடியை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆலிவ் இலை டீ ரெடி. இந்த டீயை Low BP, நீரிழிவு உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனையின்படி பருகலாம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகளவில் மழை பெய்த போதும், தமிழக அரசின் பல்வேறு பணிகளால், மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளதென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த காலத்தில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்ததெனக் கூறிய அவர், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
U-21 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. ஓமனில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்து அபாரமாக விளையாடிய இந்திய ஆடவர் அணி ஆதிக்கம் செலுத்தியது. கடைசி வரை போராடிய தென் கொரிய அணியினரால் 1 கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
Sorry, no posts matched your criteria.