News December 2, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) ஃப்ரெட்ரிக் க்ரான்ஸ்டெட் எந்த உலோகத்தை கண்டுபிடித்தார்? 2) இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி எது? 3) இந்தியாவின் முதல் பெண் மின்சார பொறியாளர் யார்? 4) முயலின் அறிவியல் பெயர் என்ன? 5) POTA என்பதன் விரிவாக்கம் என்ன? 6) வெப்பக்கதிர் வீச்சை அளக்க உதவும் கருவி எது? 7) அஞ்சுகம் என்ற சொல் எதைக் குறிக்கும்? 8) தென் கொரியாவின் தேசிய மலர் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News December 2, 2024

கேப்டனாகும் அஜிங்க்யா ரஹானே?

image

கடந்த முறை KKRக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு மாறிவிட்டார். இதனால் KKR கேப்டனை தேடி வருகிறது. ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றன. அதே நேரத்தில் KKR அணியில் இணைந்துள்ள அஜிங்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. KKRக்கு யார் சரியான கேப்டன், நீங்க சொல்லுங்க?

News December 2, 2024

ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

image

2023 – 24ஆம் நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிச. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. CBDT வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் 92E பிரிவில் அறிக்கை சமர்ப்பிப்போர் வரும் 15ஆம் தேதிக்குள் வரி கணக்கைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நவ.30 உடன் காலக்கெடு முடிந்த நிலையில், 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

மழை நிவாரணம் குறித்து முதல்வர் ஆலோசனை

image

மழையால் பாதித்தவர்களுக்கு, பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலக அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2024

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இது மேலும் கேரளா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

குளிர்/மழையால் தொண்டை வலியா? தவிர்க்க சில டிப்ஸ்

image

மழை, குளிர் காலங்களில் சளி பிடித்து, இருமல் அதிகரிக்கும். இதனால் தொண்டை வலி ஏற்படும். இதனைத் தவிர்க்க சில டிப்ஸ் * வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயை கொப்பளியுங்கள் * தொண்டை ஈரப்பதத்திற்கு சூடான சூப் எடுத்துக் கொள்ளலாம் * துளசி/வெற்றிலைச் சாறு தேனுடன் கலந்து குடிப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும் * மது மற்றும் காஃபின் பானங்களை தவிர்க்கவும் * தண்ணீர், பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அருந்தலாம்.

News December 2, 2024

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது. உள் மாவட்டங்களில் இப்படியான மழை பெய்வது மிகவும் அரிதான நிகழ்வாகும். அரூர் – 33 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பனந்தாள் – 32 செமீ, ஏற்காடு – 23 செமீ, தி.மலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் – 22 செமீ என பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியிருக்கிறது.

News December 2, 2024

தமிழகத்தில் மழை பாதிப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்

image

தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவை செயலாளருக்கு திமுக எம்.பி TR.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர் சேதங்களை மத்தியக் குழு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

News December 2, 2024

விரைவில் 8,677 வீடுகள் ஒப்படைப்பு

image

நகர்ப்புற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 8,677 வீடுகள் பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் சென்னை எர்ணாவூரில் 6,877 வீடுகளும், கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் 1,800 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இதில் பங்களிப்பு தொகை செலுத்தியவர்களுக்கு வீடுகள் தரப்பட்ட நிலையில், எஞ்சிய வீடுகளும் ஒப்படைக்கப்பட உள்ளன.

News December 2, 2024

சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்கும் சித்தார்த்

image

இன்னும் பக்குவமான நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சித்தார்த் என்றால் காதல் படங்கள்தான் என்ற முத்திரை குத்திவிடக்கூடாது என்பதற்காகவே காதல் படங்களுக்கு பிரேக் கொடுத்ததாகக் கூறினார். இதனிடையே, சந்தோஷம்தான் முக்கியம் என்பதால், காரசார கருத்துகளைப் பகிர்வதைத் தவிர்த்து, சினிமாவில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!