News December 2, 2024

கனவாய் மாறிய IPS பதவி

image

IPS, IAS அதிகாரி ஆக வேண்டும் என்பது இளைஞர்களின் லட்சியமாக இருக்கும். இதற்காக அவர் மட்டுமல்லாமல் குடும்பமே பல தியாகங்களை செய்யும். இதுபோல தியாகம் செய்து IPSஇல் தேர்ச்சி பெற்ற ஒருவர், பணியில் சேரும் முன்பே உயிரை இழந்துவிட்டார். ம.பி.யை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் (26) IPS தேர்வாகி ஹாசனில் டிஎஸ்பியாக பொறுப்பேற்க போலீஸ் காரில் சென்றபோது மரத்தில் மோதி அவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 2, 2024

3ஆம் உலகப் போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

image

2024 ராணுவ பட்ஜெட்டை ரூ.12.28 லட்சம் கோடியாக அதிகரித்து விளாதிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். 2023ம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது 28.3% அதிகமாகும். போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதால் 3ஆம் உலகப் போர் மூளும் என ரஷ்யா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் ராணுவ பட்ஜெட்டை ரஷ்யா அதிகரித்திருப்பது, 3ஆம் உலகப் போருக்கு தயாராகிறதோ என்ற எண்ணத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

News December 2, 2024

49,451 TO 48,246.. சரிந்த HYUNDAI விற்பனை

image

2024 நவம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாருதி சூசுகி கார்கள் 1,41,312 விற்பனையாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2023 நவம்பருடன் (1,34,158) ஒப்பிடுகையில் இது அதிகமாகும். டாடா (74,753), மஹிந்திரா (74,083) விற்பனையும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. HYUNDAI கார்களின் உள்ளூர் விற்பனை 49,451இல் இருந்து 48,246ஆக (2.4%) குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News December 2, 2024

சபர்மதி படத்தை காணும் மோடி

image

சபர்மதி படத்தை PM மோடி இன்று நேரில் பார்க்கவுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவர் படத்தை காண இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் மூண்ட பெரும் கலவரத்திற்கு காரணமாக சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கரசேவகர்கள் உள்ளிட்ட 59 பேர் பலியாகினர். இதை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

News December 2, 2024

’கங்குவா’ படக்குழு மீண்டும் ஷாக்!

image

’கங்குவா’ திரைப்படத்தின் HD Print இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 13ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், HD Print இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது..

News December 2, 2024

சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம்

image

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி, கோவை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. இதனால், ஊட்டி, ஒகேனக்கல், சிறுவாணி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கவும்.

News December 2, 2024

பரோட்டா சாப்பிட்ட மாணவி பலி

image

கோவை துடியலூரில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய மாணவி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவம் படிக்கும் கீர்த்தனா, நேற்றிரவு கடையில் வாங்கிய பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு தூங்கியிருக்கிறார். காலை படுக்கையில் மயங்கிக் கிடந்த அவரை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2024

மீண்டும் மகாராஷ்டிர CMஆக விரும்பும் ஷிண்டே?

image

மகாராஷ்டிர CMஆக வேண்டும் என்ற விருப்பத்தை முன்னாள் CM ஏக்நாத் ஷிண்டே சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மக்கள், தாம் CMஆக வேண்டும் என விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர புதிய CM-ஐ தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதன்முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக முடிவை தாம் ஆதரிப்பேன் எனவும் ஷிண்டேவும் கூறியுள்ளார்.

News December 2, 2024

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

image

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் வாரிய மசோதா குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். தொடர் அமளியில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய சபாநாயகர் முயன்றும் தோல்வியடைந்ததால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

error: Content is protected !!