India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. SHARE IT.
மகாராஷ்டிராவில் இன்னும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாதது ஏன்? என ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். நவ.26 ஆம் தேதியே சட்டமன்றம் காலாவதியான நிலையில், இதுவரை பாஜக கூட்டணியால் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். ஆட்சி அமைப்பது பற்றி ஆளுநர் அறிவிக்காமல், டிச.5ஆம் தேதி புதிய முதல்வர் பதவியேற்பார் என பாஜக கூறுவது, அபத்தமான அரசியல் என்றும் அவர் சாடியுள்ளார்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் EC-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பி உள்ளது. வாக்குச்சாவடியில் வாக்காளர் எண்ணிக்கையை 1,200இல் இருந்து 1,500ஆக அதிகரிக்க EC முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த SC, அதற்கான காரணம் குறித்து 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை வரை கொட்டித் தீர்த்தது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், இந்திய வானிலை மையம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த மாதத்திலும் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. அதாவது, 31% அதிக மழை பெய்யலாம் என கணித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை ரூ.84.60ஆக இருந்தது. பின்னர் மாலையில் ரூ.84.73ஆக நிறைவடைந்தது. அதாவது டாலருக்கு நிகரான மதிப்பு 13 காசுகள் சரிந்தது. இதேபோல் கடந்த வெள்ளியன்றும் 13 காசுகள் குறைந்தது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு ரூ.84.73ஆக சரிந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்பின் எச்சரிக்கை உள்ளிட்டவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
10,500 சமூகவலைதள பக்க முகவரிகளை (URL) மத்திய அரசு முடக்கியுள்ளது. காலிஸ்தான் பிரிவினை குறித்து 3 ஆண்டுகளாக தகவல் பரப்பியதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை அரசு தடை செய்துள்ளது. காலிஸ்தான் குறித்த தகவல்களை பரப்பி வந்த ஏராளமான செயலிகளையும் அரசு முடக்கியுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த தகவல்களை பரப்பிய 2,100 முகவரிகளையும் முடக்கியுள்ளது.
கனமழை எதிரொலியாக, முதல் மாவட்டமாக கடலூருக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்திற்கு UN அமைதிப்படையை அனுப்ப, PM மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இந்து கோயில்கள் சூறையாடப்பட்ட சம்பவம் மற்றும் மத துறவிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி மேற்குவங்க சட்டமன்றத்தில் பேசிய அவர், இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், அதனை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
லக்னோ அணியின் புதிய கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் என அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். தங்கள் அணியில் ரிஷப், பூரன், மார்க்ராம், மிட்செல் மார்ஷ் ஆகிய நான்கு பேருமே கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அறிவு, சிந்தனை, முடிவெடுத்தல் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றார்.
தி.மலையில் மூன்றாவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, நாமக்கல், கரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.