News April 20, 2025

துரை வைகோ ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை

image

துரை வைகோவின் ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை. சென்னையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோ மேடையில் அமர்ந்துள்ளார். அதோடு, இக்கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் மோடி இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தத்திற்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் துரை வைகோவை முதன்மைச் செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 20, 2025

அமித் ஷாவின் ஹெல்த் டிப்ஸ்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணா!

image

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.

News April 20, 2025

விஜய்க்கு போட்டியாக அஜித் படம் ரீ-ரிலீஸ்

image

பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.

News April 20, 2025

மதிமுகவில் பற்றி எரியும் புகைச்சல்

image

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. தான் வைகோவின் தளபதி என்றும், அதற்கு அடையாளமாக அவரின் முகம் பதித்த மோதிரமும், சட்டைப் பாக்கெட்டில் படமும் இருக்கும் என மல்லை சத்யா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மட்டுமல்ல மதிமுகவில் உள்ள அனைவருமே வைகோவின் தளபதிகள் தான் என துரை வைகோ விமர்சித்துள்ளார்.

News April 20, 2025

தங்கம் விலை உயர்வால் விற்பனை, நகை தயாரிப்பு சரிவு

image

<<16157434>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து வந்தாலும் விற்பனை மற்றும் நகை தயாரிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 30-ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில், வழக்கமாக வரும் ஆர்டர்களை விட 50% சரிந்துள்ளதாக கோவை நகை தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அட்சய திருதியையொட்டி வரும் நாள்களில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.

News April 20, 2025

கோர்ட் குறித்து சர்ச்சை கருத்து.. நட்டா காட்டம்

image

SC குறித்த பாஜக MP-க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் ஷர்மாவின் கருத்துகள் அவர்களின் சொந்த கருத்துக்களே, கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை என ஜேபி நட்டா காட்டமாகத் தெரிவித்துள்ளார். நீதித்துறையை பாஜக எப்போதும் மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு கோர்ட் உத்தரவிட முடியாது எனவும், உள்நாட்டு பிரச்னைகளுக்கு தலைமை நீதிபதி கண்ணாவே காரணம் என MP-க்கள் சாடியிருந்தனர்.

News April 20, 2025

காசிமேட்டில் கணிசமாக உயர்ந்த மீன் விலை

image

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ₹800க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் ₹1,000க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ சங்கரா மீன் விலை ₹350ல் இருந்து ₹400 ஆகவும், சீலா மீன் கிலோ ₹600ல் இருந்து ₹700க்கும் விற்கப்படுகிறது. மீன் வரத்து குறைந்து வருவதால், அடுத்து வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 20, 2025

தங்கம் விலை இந்த வாரத்தில் சவரனுக்கு ₹1,520 உயர்வு!

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் இந்த வாரத்தில் (ஏப்.14 – ஏப்.20) மட்டும் சவரனுக்கு ₹1,520 அதிகரித்துள்ளது. ஏப்.14(திங்கள்) அன்று 22 கேரட் 1 கிராம் ₹8,755-க்கும், சவரன் ₹70,040-க்கும் விற்பனையானது. பின்னர் கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.20) 1 கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், இந்த வாரத்தில் வெள்ளி கிராமுக்கு ₹2 மற்றும் கிலோவுக்கு ₹2,000 உயர்ந்துள்ளது.

News April 20, 2025

எனக்கு வரபோற புருஷனுக்கு இந்த தகுதிகள் இருக்கணும்!

image

தன் கணவர் இப்படிதான் இருக்க வேண்டும் ஒரு பெண் டேட்டிங் ஆப் ஒன்றில் பதிவிட, அது வைரலாகி விட்டது. தன்னை லவ் பண்ணுபவர், ₹2.5 கோடி சம்பளத்தில், ஆடம்பர வாழ்க்கையை வாழ்பவராக இருக்கணும். மேலும், புத்திசாலி, தைரியசாலி, ஃபிட்டாக, ஒழுக்கமானவராக, அப்பெண்ணின் ப்ரைவசியை மதிப்பவராக, கருத்தடை செய்து எளிதாக வாழ தெரிந்தவராக இருக்க வேண்டும் என பட்டியலிட்டுள்ளார். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News April 20, 2025

குடிநீரை கூட சுகாதாரமாக தர முடியாத அரசு: இபிஎஸ்

image

TN மக்களுக்கு குடிநீரை கூட சுகாதாரமாக வழங்க முடியாத அரசாக இருக்கிறது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி, உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக X பதிவில் குறிப்பிட்டுள்ளார். குடிநீரை கூட சுகாதாரமாக தர முடியாத அரசு இருந்து என்ன பயன்? உயிரிழப்புக்கு பொறுப்பேற்று அரசு உரிய இழப்பீடு தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!