News December 3, 2024

மொட்டையடித்தால் அடர்த்தியாக முடி வளருமா?

image

தற்போதைய ஜெனரேஷனின் முக்கிய பிரச்னை முடி. தலையில் வளரும் முடி மெல்லியதாக இருப்பதால், அடிக்கடி மொட்டை அடித்தால் வளரும் முடி அடர்த்தியானதாக இருக்கும் என சொல்வார்கள். ஆனால், அது உண்மையா? இதற்காக ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளது. மொட்டையடிக்கும்போது கூந்தல் நேராக வெட்டப்படும். இது வளர வளர கரடுமுரடானதாக இருப்பது போல் தோன்றுமே தவிர முடியின் அடர்த்தியை ஒருபோதும் மாற்றாது.

News December 3, 2024

புயல் பாதிப்பு: தமிழக அரசிடம் கமல் வைத்த கோரிக்கை

image

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க வேண்டும் என தமிழக அரசிடம் ம.நீ.ம. தலைவர் கமல் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தி.மலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது தன் நெஞ்சத்தை உருக்குவதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News December 3, 2024

High BP ஒரு சைலன்ட் கில்லர்

image

இளைஞர்களிடம் High BP அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இது சைலன்ட் கில்லர் என எச்சரிக்கும் டாக்டர்கள், சரியான வாழ்க்கை முறை மூலம் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் எனக் கூறுகின்றனர். அதன்படி, தினசரி பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது அவசியம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 30 நிமிட வேக நடைப்பயிற்சி அவசியம். இரவு 8 மணிக்குள் இரவு உணவை உண்ண வேண்டும் என்கின்றனர்.

News December 3, 2024

JUST IN: 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக, 6ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டையிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக, நீலகிரி, சேலம், தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News December 3, 2024

4 மாவட்டங்களில் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 3, 2024

BREAKING: நீலகிரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், சேலம், தி.மலை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News December 3, 2024

சிக்கனமாக பந்து வீசி சீலஸ் சாதனை

image

WI எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (கிங்ஸ்டன்) முதலில் பேட் செய்த BAN முதல் இன்னிங்சில் 164 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. WI தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீலஸ் 15.5 ஓவர்கள் பந்துவீசி 10 மெய்டனுடன் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதாவது ஓவருக்கு ஒரு ரன்னுக்கும் குறைவோகவே (0.31) விட்டுக்கொடுத்துள்ளார். 47 ஆண்டுகளில் இது தான் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாகும்.

News December 3, 2024

அங்க போகாதீங்க.. மீனவர்களுக்கு MET எச்சரிக்கை

image

சூறாவளி காற்று வீசுவதால், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசும் எனக் கூறியுள்ளது. அதேபோல், அரபிக்கடல் பகுதிகளில் கேரள – கர்நாடக கடலோரப்பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News December 3, 2024

செவ்வரளி சூட்டி ஸ்ரீபாலாவை வணங்குங்கள்!

image

சாக்த தெய்வமான அன்னை ஸ்ரீராஜேஸ்வரியின் குழந்தை ரூபமாக ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆன்மிக நூல்கள் துதிக்கின்றன. அத்தகைய தெய்வம் திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கத்தில் ஸ்ரீபாலாவாக கோயில் கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமையில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து அந்த திருத்தலத்திற்கு சென்று, ஸ்ரீவித்யை பாடி செவ்வரளி சூட்டி, தீபமேற்றி சிரத்தையுடன் ஸ்ரீபாலாவை வணங்கினால் வேண்டிய அனைத்தும் கிட்டும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!