India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தில் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் இழப்பீட்டை ஸ்டாலின் அறிவித்துள்ளார். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500, வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000, கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவரின் சொத்துக்கு சச்சின், தோனி, கோலியின் சொத்துக்களை சேர்த்தாலும், ஈடாகாது. இவர் முதல்தர கிரிக்கெட்டில் 9 போட்டி விளையாடினார். RRல் 2 ஆண்டுகள் இருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. காயத்தால் 2019ல் கிரிக்கெட்டில் இருந்து விலகியவர், பின்னர் விளையாடவே இல்லை. அவர் தான், ஆர்யமான் பிர்லா(27), குமார மங்கலம் பிர்லாவின் மகன். ABFRL இயக்குனராக இருக்கும் அவரின் சொத்து மதிப்பு ₹70 ஆயிரம் கோடியாகும்.
மகாராஷ்டிரா Caretaker CM ஏக்நாத் ஷிண்டே உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள ஜுபிடர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சொந்த ஊருக்கு ஓய்வெடுக்கச் சென்ற நிலையில், தற்போது ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலை முழுவதும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
1) புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை – 5000° C 2) வளி மண்டல ஈரப்பத மாற்றங்களைக் கண்டறிய உதவும் கருவி – Hygroscope 3) இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் – கொர்னேலியா சொராப்ஜி 4) மயன் நாகரிகத்தின் சுவடுகள் மெக்சிகோவில் உள்ளது 5) NSA – National Security Act 6) ‘திருமுருகாற்றுப்படை’ எனும் நூலின் ஆசிரியர் – நக்கீரர் 7) கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடு இனம் – மெரினோ.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தில் பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீடாக ரூ.10,000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
புயல், வெள்ளப் பாதிப்பு குறித்து <<14778066>>ஸ்டாலின்<<>> இன்று அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம், அவர்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்திய ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் புயல் வெள்ளத்தில் ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை, படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்திருந்தாலோ, அடித்து செல்லப்பட்டு இருந்தாலோ, அவற்றுக்கு மாற்று அட்டைகள், சான்றுகள் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சக மனிதர்களைப் போன்று மாற்றுத்திறனாளிகளும், அனைத்து துறைகளிலும் தங்கள் உரிமையை நிலைநாட்ட உந்துசக்தியாக 1992 முதல் டிச.3ம் தேதி இந்நாள் பின்பற்றப் படுகிறது. உடல் அளவில் குறைபாடு இருந்தாலும், மனதளவில் இவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். தடைகள் தாண்டி சாதிக்கும் அவர்களை மதித்திடுவோம், அவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க நாமும் கைகொடுப்போம்.
விழுப்புரம் வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற <<14777638>>பொன்முடி<<>> மீது கிராம மக்கள் சேறை வாரி இறைத்தனர். இதுகுறித்து அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். அதில், காரைவிட்டு இறங்காமல் பேசியதால் சேற்றை வாரி இறைத்துள்ளதாகவும், இதற்காக துன்புறுத்தலோ, அதிகார துஷ்பிரயோகமோ நிகழக்கூடாது. அப்படியொரு அராஜகத்தை திமுக அரசு முன்னெடுத்தால், அதிமுக வேடிக்கை பார்க்காது எனக் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.