India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கம் விலை நேற்றும், நேற்று முன்தினமும் கிராமுக்கு ரூ.7,130 ஆகவும், சவரன் தங்கம் ரூ.57,040ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,140 ஆகவும், சவரன் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து ரூ.57,120 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனையாகிறது.
ஆஸி. அணிக்கு எதிராக நாளை நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி ஓப்பனர் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் 2வது போட்டியில் ரோஹித்திற்கு பதிலாக கே.எல் ராகுல் ஓபனிங் செய்யலாம் என முன்னாள் கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸி.க்கு ரோஹித் தாமதமாக வந்ததால் செட்டாக டைம் எடுக்கும். அதனால் அவர் 5 அல்லது 6வது வரிசையில் களமிறங்கலாம்’ என்றார்.
ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ₹56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மானிய விலை டிக்கெட் இன்னும் ஏன் தொடங்கப்படவில்லை என துரை வைகோ MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதை குறிப்பிட்ட அவர், ஒரு ரயில் டிக்கெட் விலை ₹100 என்றால், பயணிகளிடம் ரயில்வே ₹54 மட்டுமே வசூலிக்கிறது என்றார்.
இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலையான சூழ்நிலையை மோடி உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார். விரைவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கான உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் அமைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபல திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார். நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தாயாரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் தமிழகத்தில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள படத்திற்கு DSP இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஆந்திரா, தெலங்கானாவில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Stay tuned with Way2News for full review
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹10,000 நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், 50% பாதிப்புகள் தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனவே முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1 லட்சம் வழங்கத் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
“அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்போம் என்று அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இபிஎஸ் வெளியிட்ட பதிவில், மக்களால் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
தன் ஈடு இணையில்லா நலத்திட்டங்களால் மக்களின் இதயங்களில் வாழும் ஒப்பற்ற ஆளுமை ஜெயலலிதா என புகழ்ந்துள்ளார்.
மழை காரணமாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. சென்னையில் முருங்கைக்காய் 1 கிலோ ₹400க்கும், சில்லறை விற்பனையில் ₹500க்கும், ஒரு முருங்கை ₹45-55க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு 1 கிலோ சில்லறை விலையில் ₹500க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹90க்கும், சின்ன வெங்காயம் ₹80க்கும் விற்கப்படுகிறது. வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
‘புஷ்பா-2’ படம் தெலுங்கில் இன்று அதிகாலையிலேயே ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் என்ட்ரி, படத்தில் இருக்கும் மாஸ் காட்சிகள், பகத் பாசிலின் நடிப்பு போன்றவை மிகவும் அருமை என அவர்கள் கூறி வருகிறார்கள். பலரும் புஷ்பா உண்மையில் WildFire என்றும் கொண்டாடுகிறார்கள். படத்தின் முழு விமர்சனத்திற்கு Stay tuned with Way2News…
Sorry, no posts matched your criteria.