News December 5, 2024

இனி ஆண்டிற்கு இருமுறை மாணவர் சேர்க்கை

image

புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர்க்கல்வி சேர்க்கை பின்பற்றப்படும் என UGC அறிவித்துள்ளது. ஆண்டிற்கு இருமுறை ( ஜூன், ஆக.,மற்றும் ஜன., பிப்.,) உயர்க்கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள பல்கலை.கள், கல்லூரிகள் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். 12ஆம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால், விரும்பும் படிப்புகளில் சேரலாம்.

News December 5, 2024

இதுதான் மக்கள் நல ஆட்சியா? அன்புமணி

image

தமிழக அரசுக்கு மக்கள் மீதான அக்கறை எப்போது வரும் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் இருவர் உயிரிழந்தாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக பேசிய அவர், மக்களுக்கு சரியான குடிநீரை கூட வழங்க முடியாத அரசு, மக்கள் நல அரசாக எப்படி இருக்கும் என்றும் சாடியுள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 5, 2024

மன்சூர் அலிகான் மகனுக்கு இறுகும் பிடி

image

மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான், கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, துக்ளக் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் உள்பட 7 பேர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, தன் பையன் சிகரெட் அடிப்பான் என்றே தெரியாது எனவும், தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் மன்சூர் கூறியிருந்தார்.

News December 5, 2024

இந்தியா படுதோல்வி

image

ஆஸி., அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் 7 பேரின் மொத்த ரன்கள் 18 மட்டுமே. இதன்பின் களமிறங்கிய AUS வெறும் 16.2 ஓவரிலேயே இலக்கை ( 102/5) எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதாவது, IND 206 பந்துகளில் அடித்த இலக்கை AUS 98 பந்துகளிலேயே எட்டியது.

News December 5, 2024

7 மாத குழந்தையையுமா.. உடலே நடுங்குது

image

இந்தியா எங்கு சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை காம வெறியர்கள் விட்டுவைப்பதில்லை. ஆம்! கொல்கத்தாவில் 7 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக ரேப் செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நவ.30 நள்ளிரவு 1:45-க்கு நடைபாதையில் அழுது துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் அந்தரங்க பகுதிகளில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

News December 5, 2024

SK அக்காவுக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

image

தனது அக்காவிற்கு இங்கிலாந்து நாடு அளித்துள்ள அங்கீகாரம் குறித்து SK பூரிப்புடன் பதிவிட்டுள்ளார். கோல்ட் மெடலுடன் MD படிப்பை முடித்த அரசு மருத்துவர் கெளரி மனோகரி(38)யின் மருத்துவ நிபுணத்துவம், பங்களிப்பை பாராட்டி FRCP (Fellow of the Royal College of Physicians) அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனைப் பெற்றவர்கள் வெளிநாட்டில் படித்திருந்தாலும் இங்கிலாந்திலும் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

News December 5, 2024

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு

image

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி மன்மோகன் 2008இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

News December 5, 2024

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5,000 திட்டம் தொடக்கம்

image

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்கும் PM INTERNSHIP திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மோடியால் 2ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட இருந்த இத்திட்டம், பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து INTERNSHIP கடிதம் அனுப்பப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டு, ரூ.6,000 டெபாசிட் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 5, 2024

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு இது ஒரு வரலாற்று தருணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வீரர்களின் ஒப்பற்ற திறமை, நம்பமுடியாத குழுப்பணிக்கு கிடைத்த வெற்றி எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மஸ்கட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

News December 5, 2024

ஹீலிங் செய்ய தவளை விஷத்தை குடித்த நடிகை பலி!

image

உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்து மெக்சிகோ நடிகை மார்செலா அல்காசர் துடிதுடித்து உயிரிழந்தார். இறை நம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்ட இவர், மத விழா ஒன்றில் நடந்த ஹீலிங் எனப்படும் வினோத சடங்கில் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் குடித்தது ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளை விஷம் என்பது தெரியவந்துள்ளது. ஹெல்த் விஷயத்துல விளையாடாதீங்க..

error: Content is protected !!