India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PAN CARDஇல் இலவசமாக அப்டேட் செய்யும் முறையைப் பார்க்கலாம். <
முதல் மாவட்டமாக விழுப்புரத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளி), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின், டிச.9 (திங்கள்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ICC அறிவித்துள்ளது. வீரர்கள் பட்டியலில் பும்ரா, PAK வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், மற்றும் SA ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 5 ஸ்டார் ஹோட்டல்கள் தூய காற்றை கஸ்டமர்களுக்கு வழங்கி வருகின்றன. நகரத்தின் காற்று தர மதிப்பீடு 397 என அதிகரித்துள்ள நிலையில், 58 என்ற அளவில் தூய காற்றை அவை வழங்குகின்றன. ஆனால், இதெல்லாம் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் தான். சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இங்கும் அத்தகைய தூய காற்று சேவை விரைவில் அறிமுகமாகலாம்.
RSSஇல் இருந்த ஃபட்னவிஸ், BJPஇல் சேர்ந்து 27 வயதில் நாக்பூரின் இளம் மேயராக உயர்ந்தார். பின்னர், அரசியலில் சிறுத்தையை விட வேகமாகப் பாய்ந்த அவர், 2014இல் 44 வயதில் MH CM ஆனார். 2019 தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி சீட்டில் அமர நேர்ந்தது. சாதுர்யமாக செயல்பட்டு மீண்டும் BJP ஆட்சியைக் கொண்டு வந்து Dy CM ஆனார். தற்போது கடும் போட்டிக்குப் பிறகு 3வது முறையாக CM நாற்காலியை பிடித்து அசத்தியுள்ளார்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமையில்லை என சாம்சங் நிறுவனம் வாதாடிய நிலையில், பல நிறுவனங்களின் பெயரில் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக CITU எதிர்வாதம் வைத்தது. இரு தரப்பையும் கேட்ட நீதிபதி, பதிவுத்துறைக்கு ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
மது குடிப்பது 7 வகை கேன்சர் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அதன்படி, மதுவுக்கும் கேன்சர் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் & மார்பகம் பகுதிகளில் கேன்சர் பாதிக்க வாய்ப்பு அதிகம். டெய்லி குடிச்சாலும், கொஞ்சமா தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் கூட, இந்த எச்சரிக்கை பொருந்துமாம்.
IMDBயில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சோபிதா துலிபாலா 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், சோபிதாவின் பின்னணியை தெரிந்து கொள்ள பலர் இவரை பற்றி தேடியதால், இந்த இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சமந்தா 8ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் திரிப்டி டிம்ரி, தீபிகா படுகோனே 2ஆம் இடத்திலும், இஷான் கட்டர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் CM ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. அவரது JMM கட்சியில் இருந்து 6 பேர், காங்கிரஸில் 4 பேர், RJD-ல் ஒருவர் என 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அமைச்சரவையில் 50% புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 81 இடங்களில் 56 இடங்களை IND கூட்டணி கைப்பற்றியிருந்தது.
இந்தியா அனுப்பிய PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக செயற்கைக் கோள்களை, நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் உருவாக்கிய சூரியனின் வெளிவட்ட பாதையை ஆராயும் 2 செயற்கைகோள்களை இந்தியா வெற்றிகரமாக இன்று மாலை விண்ணில் ஏவியது. விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவின் திறனை இந்த சாதனை காட்டுவதாக இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.