India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 120 ▶குறள்: வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். ▶பொருள்: பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வியாபாரம் செய்தலே வணிக நெறி எனப் போற்றப்படும். அப்படி வாணிகம் செய்வதே வியாபாரிகளுக்கு அழகாகும்.
உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் அந்நாட்டின் ஆயுத படையைச் சேர்ந்த 280 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “2022ஆம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை குர்ஸ்கில் உக்ரைன் 37,935 வீரர்கள் & 229 பீரங்கிகளை இழந்துள்ளது. பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
பழநி முருகன் திருக்கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை HRCE வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், உதவிப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளால் சேர விரும்புவோர் அஞ்சல் வழியே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-45. கல்வித்தகுதி: 10, +2, ITI, Diploma, BE. சம்பளம்: ₹11,600 – ₹1,16,200/-. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜனவரி 8, 2025. கூடுதல் தகவலுக்கு <
திருச்சி SP வருண்குமார் மீது நாதக சார்பில் தமிழக DGP சங்கர் ஜிவாலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நடந்த IPS அதிகாரிகளின் மாநாட்டில் வருண்குமார், நாதகவை பிரிவினைவாத இயக்கம் என பேசியிருந்தார். இந்நிலையில், நாதக குறித்து அவதூறாக பேசி வருவதாகவும், பொய் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டிச. 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘விடாமுயற்சி’ படத்தை 2025 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சிங்கப்பூரில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 9வது சுற்றில், இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரென் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி, ‘டிரா’ ஆனது. இது, இத்தொடரில் தொடர்ச்சியாக பதிவான 7ஆவது ‘டிரா’வாகும். 9 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா ஒரு சுற்றில் வென்று, 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (டிச.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
புத்தக வாசிப்பு கற்பனைகளை வளர்க்கும். வாசிப்பு பழக்கத்தை மீண்டும் கொண்டுவர ரத்தன் டாடாவின் Trusted Manager சாந்தனு நாயுடு ஊர் ஊராக சென்று Bookies Meet நடத்துகிறார். மும்பை, புனே, பெங்களூர் டிச.8இல் ஜெய்ப்பூரில். பொது இடங்களில் ஒன்றுகூடி அமைதியாக வாசிக்கும் நிகழ்வு இது. சமூகமாக ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அது எளிதாக பழக்கமாகும் என்கிறார். உங்களுக்கு பிடித்த புத்தகம் எது?
Sorry, no posts matched your criteria.