News April 20, 2025

IPL: புள்ளிப் பட்டியலில் யாரு டாப்?… லிஸ்ட் இதோ!

image

18-வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் சரிபாதி நிறைவடைந்துவிட்டன. அனைத்து அணிகளும் 7 போட்டிகள் விளையாடிவிட்டன. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் தலா 5 போட்டிகளில் வென்று முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் உள்ளன. 2 வெற்றிகளை பெற்று கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 2-ம் பாதி எப்படி இருக்கும்?

News April 20, 2025

ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்று ‘டபுள் டமாக்கா’..!

image

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும், 5-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன. இரு அணிகளும் பலமாக இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும். மற்றொரு போட்டியில், ஐபிஎல் தொடரின் எல்- கிளாசிக்கோ எனப்படும் சென்னை – மும்பை அணிகள் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்னைக்கு டபுள் ட்ரீட் தான்!

News April 20, 2025

‘மண்டாடி’யாக மாஸ் காட்டும் சூரி..!

image

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என பெயரிடப்பட்டு மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் சூரி மீனவராக நடிக்க உள்ளாராம். மண்டாடி என்றால் நீரின் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தியை அறிந்தவர் என சொல்லப்படுகிறது. முத்துகாளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் இந்த படத்தில், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

News April 20, 2025

பாஜக வேண்டாம்… தவெக போடும் கூட்டணி கணக்கு!

image

அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை எனவும் தவெகவின் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிசம்பரில் கூட்டணி கட்சிகள் யார்? என்பது குறித்து தெரிவிப்போம் எனவும் தேர்தலில் திமுகவின் வாக்குகளை கைப்பற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பாஜக இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க தவெக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

News April 20, 2025

இந்தியா செல்ல மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம்

image

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லாது என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராமல் துபாய் மைதானத்தில் விளையாடியது போலவே, தாங்களும் செய்வோம் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தாண்டு இந்தியா நடத்தும் மகளிர் உலகக் கோப்பை செப். 29 தொடங்கி அக். 26 வரை நடைபெற உள்ளது.

News April 20, 2025

‘உயிர் உங்களுடையது தேவி’.. த்ரிஷா க்யூட் போட்டோஷூட்

image

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போதும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். இளசுகளை கவரும் வகையில் இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சேலை அணிந்து த்ரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ‘Cuteness overload’, ‘Gorgeous’ என ரசிகர்கள் கமெண்ட்டில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

News April 20, 2025

திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக..!

image

பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டுக்கான அழைப்பிதழை பாமக மாவட்டச் செயலாளர் சரவணன் கொடுக்க, அதனை சிரித்த முகத்துடன் திருமாவளவன் பெற்றுக் கொண்டுள்ளார். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். 2011-ல் திமுக கூட்டணியில் பாமக – விசிக இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2025

வரலாற்றில் இன்று!

image

➤ 1889 – சர்வாதிகாரியாக வரலாற்றில் அறியப்படும் ஹிட்லர் பிறந்த நாள். ➤ 1950 – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறந்த நாள். ➤ 1972 – யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது. ➤ 2012 – பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டு 127 பேர் உயிரிழப்பு. ➤ 2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் பலி.

News April 20, 2025

தேர்தலுக்கு மட்டுமே பாஜக கூட்டணி: SP வேலுமணி

image

2026-ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இருப்பது தேர்தலுக்கான கூட்டணி எனத் தெரிவித்த அவர், வக்ஃப் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 20, 2025

சே குவேராவின் தன்னம்பிக்கை வரிகள்!

image

▶ விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையெனில் உரம். ▶ எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். ▶ புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶ அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶ சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.

error: Content is protected !!