News December 6, 2024

கனமழை வெள்ளத்துக்கு இனி எந்த பகுதியும் தப்பாது?

image

பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு வழக்கமாக சென்னையும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த மாவட்ட மக்கள் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த மழைகாலம், தமிழகத்தின் அனைத்து பகுதியையும் ஒருவழி பண்ணிவிட்டது. கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, விழுப்புரம், கடலூர், ஈரோடு என்று சுற்றி வந்து அனைத்து பகுதியிலும் கதகளி ஆடிவிட்டது.

News December 6, 2024

சமூகநீதி புரட்சியாளரை நினைவில் ஏந்துவோம்!

image

கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்பட்ட நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வு உயர வட்டமேசை மாநாட்டில் வாதாடிய குரல் அற்றவர்களின் குரலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். பெரும்பான்மை மக்களின் சமூக விடுதலைக்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த பெருந்தகை. நமக்கு உரிமை அளித்த அரசியலமைப்பை வடிவமைத்த அண்ணலின் 68ஆவது நினைவு நாளில் அவர்‌ ஏற்படுத்திய சமூக புரட்சியை நினைவில் ஏந்துவோம்.

News December 6, 2024

பெண்களின் படிப்புக்கு தடை; ரஷீத்கான் கண்டனம்

image

ஆப்கனில் பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிப்பதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், “கல்வி தொடர்பான இஸ்லாமிய போதனைகள் பெண்கள் அறிவைப் பெறுவதையே வலியுறுத்துகிறது. பெண்களுக்கான கல்வி & மருத்துவ நிறுவனங்கள் மூடப்பட்ட ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

News December 6, 2024

பொடுகு பிரச்னைக்கு தீர்வளிக்கும் பூண்டு பேக்

image

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு பூண்டு ஹேர்பேக் தீர்வளிக்கும் என சருமநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 5 பூண்டு பற்கள், 2 டீஸ்பூன் தேன் இரண்டையும் எடுத்து, பேஸ்ட் போல அரைக்கவும். அதை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து, பிறகு தலையை, வெந்நீரில் அலச வேண்டும். அதன் காரத்தன்மை, தலையில் உள்ள பூஞ்சை போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

News December 6, 2024

‘புஷ்பா 2: தி ரூல்’ என் மனதை தொட்டுவிட்டது: அட்லீ

image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை இயக்குநர் அட்லீ மனந்திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “புஷ்பா 2: தி ரூல் படம் உண்மையிலே என் மனதை தொட்டுவிட்டது. அல்லு அர்ஜூன் சார், உங்களுடைய நடிப்பு சூப்பராக உள்ளது. மற்றொரு பிளாக்பஸ்டருக்காக வாழ்த்துக்கள் சார். என்னவொரு கடினமான உழைப்பு, மிகவும் பிடித்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News December 6, 2024

இந்தியாவில் ₹6,000 கோடி முதலீடு செய்யும் OnePlus!

image

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் OnePlus நிறுவனம் இந்தியாவில் ₹6,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ‘புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்’ என்ற பெயரில் இந்த முதலீட்டை மேற்கொள்ளவுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் தங்கள் பொருள்களின் உறுதித்தன்மை, வணிகத்தை வலுவாக்குவது, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

News December 6, 2024

சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம்!

image

சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், “சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜகவினர் எதிரானவர்கள் அல்ல. முதல்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது பீஹாரில்தான்; அதுவும் பாஜக ஆதரவுடன் நடந்தது. மகாராஷ்டிரத்தில் இதை அரசியலாக்கினால் சமூகத்தில் பெரிய சிதைவுக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டார்.

News December 6, 2024

டிசம்பர் 6 வரலாற்றில் இன்று!

image

➤1768 – பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் வெளியானது. ➤1892 – விடுதலைப் போராளி ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள். ➤1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின. ➤1956 – பாபா சாகேப் அம்பேத்கர் மறைந்த நாள். ➤1971 – இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர் வெடித்தது. ➤1992 – அயோத்தி கலவரத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர். ➤2006 – செவ்வாய்க் கோளில் நீர் திரவம் இருப்பதை நாசா உறுதி செய்தது.

News December 6, 2024

நக்சலைட்டுகள் ஒழிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை

image

நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ராய்ப்பூரில் நக்சல் ஒழிப்பு & உயர்மட்ட பாதுகாப்பு மறு ஆய்வு கூட்டம் தலைமையேற்று நடத்தவுள்ளார். பின் ஜக்தல்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், சரணடைந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர், குடியிருப்புவாசிகளை சந்தித்து உரையாடி, அவர்களுடன் உணவருந்த உள்ளார்.

News December 6, 2024

PSK எண்ணிக்கையை 600ஆக உயர்த்த திட்டம்!

image

தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் (PSK) எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில், 600ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2017இல் இருந்து 442 அஞ்சலகங்கள் பாஸ்போர்ட் சேவையை வழங்குகின்றன. அதை தொடர்ந்து மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகம் & தபால் துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. நாடு தழுவிய அளவில் 1.52 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!