India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸி. அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2வது போட்டியில் ராகுல் செய்த சம்பவம் தான் இணையத்தில் ட்ரெண்டிங். போலந்தின் முதல் ஒவர், முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதாக நினைத்து ராகுல் வெளியேறினார். ஆனால் அது நோ பால் என அம்பயர் கூறினார். இதில் வேடிக்கை என்ன வென்றால் பந்து கையுறையில் படவே இல்லை. மேலும் ராகுல் அவுட் ஆனதாக நினைத்து கோலியும் பவுண்டரி எல்லை வந்து திரும்பி சென்றார்.
2024இல் நிகழ்ந்த 1.68L விபத்துகளில் Helmet போடாததால் மட்டும் 30,000 பேர் பலியானதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மக்கள் பலர் ரோட்டில் Red சிக்னலில் நிற்பதில்லை, சட்டத்தை மதிப்பதே இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அதிக விபத்து நிகழ்ந்த இடங்களில் ₹40,000 கோடியில் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். Please Obey Traffic Rules..
சென்னை குரோம்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 57 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை மருத்துவமனையில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சட்டென பார்த்தால், எதுக்கு பணவிரயம் என தோன்றும். பூமியின் மேற்பரப்பில் அணுக்கழிவுகள் பரவாமல் பூமிக்கு அடியில் புதைத்து வைக்க இந்த ஓங்காலோ என பெயர் கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இது பின்லாந்தின் மேற்கு கடற்கரையான யூரஜோகி என்ற இடத்தில் சுமார் ₹7 ஆயிரம் கோடி செலவில் 1480 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 2025ல் இருந்து 1 லட்ச வருடங்களுக்கு இச்சுரங்கம் மூடப்பட்டிருக்குமாம். ஆனா யாரு அப்போ திறப்பாங்க?
கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. UBS வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,757ஆக இருந்த பில்லினியர்களின் எண்ணிக்கை 2,682ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 268 பேர் ₹100 கோடி சொத்து மதிப்புடன் பில்லினியர்களாக உருவெடுத்துள்ளனர். இந்தியாவில் 185 பில்லினியர்கள் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எடுக்க தவறும் பணம் ஏடிஎம்மில் உள்ளே செல்லும் வசதியை மீண்டும் கொண்டு வர ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பணத்திற்கு பதிலாக தபால் உறை போன்றவற்றை வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டதால் அந்த வசதி நீக்கப்பட்டது. தற்போது, வேறு மாதிரியான மோசடிகள் நடப்பதால், அதை தடுக்கும் வகையில் மீண்டும் அந்த வசதி கொண்டுவரப்படவுள்ளது.
கடந்த வாரம் ருத்ர தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புயலால் 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 3,685 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 96,000 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை பெண் போலீஸ் ஒருவர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி காந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் SSIஆக இருந்த ஸ்டெல்லா மேரி (50) என்பது தெரியவந்துள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்க அவசரமாகச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. போலீசா இருந்தாலும் பொறுமை அவசியம்..
லட்சுமி கூரையை பிச்சிட்டு கொட்டுதுன்னு கேள்வி பட்டிருப்போம்ல அது கொல்லம் பால் வியாபாரி லைப்ல நிஜமாகியிருக்கு. கேரள அரசின் பூஜா பம்பரில் ₹12 கோடி விழுந்த JC 325526 நம்பருக்கு சொந்தக்காரர் கொல்லம் தினேஷ்குமார்(41) என்பது தெரியவந்துள்ளது. Tax போக ₹7.6 கோடி தினேஷுக்கு கிடைக்கும். ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்து கூற உறவினர்கள் படையெடுத்து வருகின்றனர்.
‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு டிச. 23ஆம் தேதி நிறைவடைகிறதாம்.
Sorry, no posts matched your criteria.