India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த ஆண்டில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். ஆஸி.,க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் இன்றைய ஆட்டத்தில், கவாஜாவை அவுட் ஆக்கி, இந்த ஆண்டின் 50ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், இந்திய டெஸ்ட் வரலாற்றில் இந்த சாதனையை 3ஆவது பவுலராக பும்ரா இணைந்துள்ளார். முன்னதாக, கபில் தேவ் மற்றும் ஜாஹிர் கான் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விசிகவின் ஆதவ் அர்ஜுன் பேசியது தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங். ஒருபக்கம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை?” எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும், கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்றார். ஆதவ் குறிப்பிடும் கருத்தியல் தலைவர் யார்- திருமாவா? விஜய்யா?
தற்போதைய தலைமுறையில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் சிலர் இரவிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தூங்குவார்கள். ஆனால் இப்படிச் செய்தால் உடல் வெப்பம் அதிகரித்து நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் பூஞ்சை தொற்றுக்கு, ஒவ்வாமை, அலர்ஜி, முதுகுவலி, வீக்கம், பாலியல் ஆரோக்கியம் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. இரவில் இவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ₹1.6 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக RBI உயர்த்தியுள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மலிவாக மற்றும் எளிதாகக் கிடைக்கும் கடனை அதிகரிப்பதன் மூலம், நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்த RBI முடிவு செய்துள்ளது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிகவின் ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் இனி மன்னர் ஆட்சிக்கு இடமில்லை, மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மறைமுகமாக திமுகவை விமர்சித்த அவர், பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக உருவாக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
‘மகாராஜா’ திரைப்படம் கடந்த நவ.29ஆம் தேதி சீனாவில் ரிலீசான நிலையில், ஒரு வாரத்தில் ₹40 கோடி அப்படம் வசூலித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் நேற்றுவரை ₹150 கோடியை வசூலை குவித்துள்ளது. சீனாவில் அதிக வசூல் செய்த ‘2.0’, ‘கனா’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ‘மகாராஜா’வும் இணைந்துள்ளது. சீன ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இன்னும் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள கோலி சிரமப்படுவதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 48 ஆக சரிந்ததற்கு இதுதான் முக்கிய காரணம் என்றும், இதை சரிசெய்ய கோலி முயற்சிக்காமல் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் கோலி தனது விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சலோ போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் இவை. *பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான லீகல் கேரண்டி *விவசாய கடன் தள்ளுபடி, விவசாயி/ விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம், மின்சார கட்டண உயர்வு தடுப்பு, போராட்ட வழக்குகள் தள்ளுபடி, லக்ஷ்மிபூர் கேரி வன்முறை வழக்கில் நீதி *நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 மீண்டும் கொண்டுவருதல், உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிக்காக தமிழ்நாட்டுக்கு ₹944.80 Cr வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியக் குழு நாளை முதல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அந்த குழு அறிக்கை அளித்த பின், கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. முன்னதாக புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு உடனடியாக ₹2000 Cr வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.