India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக சவால் விடுத்துள்ளார். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை உரிமையான சமூகநீதி பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் இருக்கும் 200 வெல்வோம் என்று கூறும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன். 2026 தேர்தலில் உங்கள் (திமுக) கூட்டணியை மக்களே மைனஸ் ஆகி விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வழங்கிய புகைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் கையை விஜய் பிடித்துள்ளதை போன்று தத்ரூபமாக படம் வரையப்பட்டிருந்தது. அதை சில வினாடிகள் ஆச்சரியம் விலகாமல் பார்த்த விஜய், சிரித்த முகத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
விஜய்க்கு வேலை பார்ப்பவர் ஆகிவிட்டார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா என்று அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவுக்கு பின் அரசியல் கணக்கு இருக்கிறது எனக் கூறிய அவர், ஆதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை திருமா எடுப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால், ஆதவ், விசிகவில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அம்பேத்கர் தனது 9 வயதில் பட்ட கஷ்டம் தன்னை மிகவும் பாதித்ததாக விஜய் தெரிவித்துள்ளார். தனது அப்பாவை பார்க்க அம்பேத்கரும் அவரது சகோதரரும், வெளியூர் சென்ற போது, சாதியை காட்டி மாட்டு வண்டிக்காரர் அவர்களை ஏற்ற மறுத்தாராம். காசு அதிகம் கொடுப்பதாக சொன்ன பிறகே வண்டியில் ஏற அனுமதித்தாராம். ஆனால் அதை விட கொடுமை, சிறுவர்களை ஏற்றிவிட்டு தீண்டாமை காரணமாக வண்டிக்காரர் நடந்தே சென்றதையும் விஜய் பகிர்ந்துள்ளார்.
அதேபோல், வெளிநாடுகளில் படித்துவிட்டு இங்கு அரசு அதிகாரியாக பணியாற்றிய அம்பேத்கரை, மும்பைக்கு அருகே உள்ள கிராம மக்கள் மாட்டு வண்டியில் அழைத்து வர முடிவு செய்தனர். ஆனால், அம்பேத்கருக்கு சமமாக அமர்ந்து வண்டி ஓட்ட வண்டிக்காரர் மறுக்கிறார். லண்டனில் பட்டம் பெற்றவரை விட தான் உயர்ந்தவர் என வண்டிக்காரர் நினைத்தது தன்னுடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக விஜய் கூறியுள்ளார்.
ஜப்பானின் பிரபல பாப் ஸ்டாரும் நடிகையுமான மிகோ நகயாமா (54), டோக்கியோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் நடித்து வெளியான ‘லவ் லெட்டர்’ படம் பிரபலமானது. கிறிஸ்துமஸ் கான்செர்ட் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால், அந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வீட்டு பாத்ரூம் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது, சட்டம் ஒழுங்கு, சமூகநீதியை பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றும் மணிப்பூரில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை கண்டுகொள்ளாத அரசு நம்மை மேல் இருந்து ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கு தான் அப்படியென்றால், இங்கு சமூக நீதி பேசும் அரசு, வேங்கைவயல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று திமுகவை விமர்சித்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை ஜனநாயக உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டில் பேசியவர், ஜனநாயகம் காக்கப்பட நியாயமான, சுதந்திரமான தேர்தல் வேண்டும் எனவும் அதற்கு ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் பங்கேற்றது ஒரு வரமாக நினைக்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். சாதி படிநிலையால் அம்பேத்கர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட விஜய், வன்மத்தை மட்டும் காட்டிய இந்த சமூகத்திற்கு அம்பேத்கர் திரும்பி என்ன செய்தார் என்பதை நினைத்தால் மெய்சிலிர்கிறது எனக் கூறினார். சாதி, மதங்கள் குறித்தும் அவர் மிகத் தெளிவாக பேசியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுன், “சாதி, மதம் இரண்டோடு ஊழல் என்ற ஒன்றையும் இணைத்து அரசியல் பேசிட வேண்டும்” என்றார். திராவிட, இடதுசாரி கட்சிகள் சாதி, மத அரசியலை எதிர்த்தாலும், ஊழல் எதிர்ப்பில் அடக்கி வாசிக்கின்றன. வலதுசாரி கட்சிகளோ ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி சாதி, மதவாத எதிர்ப்பை கண்டுகொள்வதில்லை. நீங்கள் எந்த அரசியலை ஆதரிக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.